Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ மழைநீர் வெளியேற்றும் பணி : கலெக்டர் ஆய்வு

 மழைநீர் வெளியேற்றும் பணி : கலெக்டர் ஆய்வு

 மழைநீர் வெளியேற்றும் பணி : கலெக்டர் ஆய்வு

 மழைநீர் வெளியேற்றும் பணி : கலெக்டர் ஆய்வு

ADDED : டிச 05, 2025 06:14 AM


Google News
Latest Tamil News
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் தொடர் கனமழையால் பல பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்றும் பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.

விழுப்புரம் மாவட்டத்தில் தொடர் கனமழையால் பல இடங்களில் ஏரிகள், குளங்கள், அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், சாலைகள், தேசிய நெடுஞ்சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது.

திண்டிவனம் - மரக்காணம் தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள கிடங்கல் ஏரி, காவேரிப்பாக்கம் ஏரி, வீராங்குளம் ஏரிகளில் மழையால் தண்ணீர் நிரம்பி, தேசிய நெடுஞ்சாலையில் தேங்கியது.

இந்த நீர் வெளியேற்றும் பணியை தேசிய நெடுஞ்சாலை அலுவலர்களோடு, கலெக்டர் ஆய்வு செய்தார்.

திண்டிவனம், நகாட்சி வகாப் நகரில் உள்ள கருணாவூர் வாய்க்காலில் மழைநீர் வரத்து அதிகரித்து வருவதால், வாய்க்காலை அகலப்படுத்தும் பணி. தளவானுார் அணைக்கட்டில் நீர்வளத்துறை சார்பில் மாநில நிதி திட்டத்தின் கீழ் 84 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடக்கும் அணைக்கட்டு புனரமைப்பு உள்ளிட்ட பணிகளை பார்வையிட்டார்.

பின் கலெக்டர் கூறுகையில், பல இடங்களில் தேங்கிய மழைநீர் உடனே வெளியேற்றப்பட்டு வருகிறது. சாலைகளில் விழுந்த மரங்களை நெடுஞ்சாலை துறை ஊழியர்கள் உடனே அகற்றினர். மழையால் பாதிக்கப்பட்டு அனுமந்தை ஊராட்சி, பெரிய நொளம்பை ஊராட்சி, உப்புவேலுார் ஊராட்சிகளைச் சேர்ந்த 36 குடும்பங்களைச் சேர்ந்த 117 பேர் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டு தேவையான உணவு, குடிநீர், கழிப்பறை வசதிகள் ஆகிய அத்தியாவசிய தேவைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது' என்றார்.

சப் கலெக்டர் ஆகாஷ், நீர்வளத்துறை செயற் பொறியாளர் அருணகிரி, நகராட்சி கமிஷனர் பானுமதி, தாசில்தார்கள் யுவராஜ், துரை செல்வம் உட்பட அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us