/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/இட ஒதுக்கீடுக்கு மத்திய அரசை கைகாட்டும் முதல்வர்: ராமதாஸ் குற்றச்சாட்டுஇட ஒதுக்கீடுக்கு மத்திய அரசை கைகாட்டும் முதல்வர்: ராமதாஸ் குற்றச்சாட்டு
இட ஒதுக்கீடுக்கு மத்திய அரசை கைகாட்டும் முதல்வர்: ராமதாஸ் குற்றச்சாட்டு
இட ஒதுக்கீடுக்கு மத்திய அரசை கைகாட்டும் முதல்வர்: ராமதாஸ் குற்றச்சாட்டு
இட ஒதுக்கீடுக்கு மத்திய அரசை கைகாட்டும் முதல்வர்: ராமதாஸ் குற்றச்சாட்டு
ADDED : ஜூலை 25, 2024 03:46 PM

திண்டிவனம்: 'ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என முதல்வர் ஸ்டாலினிடம் கேட்டால், அவர் மத்திய அரசை கை காட்டுகிறார் என பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே கோனேரிக்குப்பத்தில் சரசுவதி கலை அறிவியல் கல்லுாரி வளாகத்தில், பா.ம.க.,நிறுவனர் ராமதாசின் 86வது பிறந்த நாளை முன்னிட்டு, முப்பெரும் விழா நடந்தது. பா.ம.க., கவுரவ தலைவர் மணி உட்பட பலர் பங்கேற்றனர்.
விழாவில், பா.ம.க.,நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது: தமிழகத்தில் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என பல ஆண்டுகளாக கேட்டு வருகிறோம். முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து, வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும். ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என நான் கோரிக்கை வைத்தேன்.
நானும் உங்களை விட்டால் யார் கொடுப்பார்கள் என்று கூறினேன். அதற்கு ஸ்டாலினும் தலையாட்டினார். தமிழக மக்கள் இன்னும் இரண்டு மாதத்தில் இடஒதுக்கீடு குறித்து பேசப்போகிறார்கள். ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என முதல்வர் ஸ்டாலினிடம் கேட்டால், அவர் மத்திய அரசை கை காட்டுகிறார். இவ்வாறு அவர் கூறினார்.