ADDED : செப் 30, 2025 05:58 AM

செஞ்சி : செஞ்சி அடுத்த காரியமங்கலம் கிராமத்தில் விவசாயிகள் முன்னேற்ற சங்கம் சார்பில் சம்பா பருவ நெல் நடவு விழா நடந்தது.
சங்க தலைவர் சக்திவேல் நெல் நடவை துவக்கி வைத்தார். வல்லம் மேலாண்மை உதவி இயக்குனர் சரவணன் முன்னிலை வகித்தார். தென்னிந்திய நுகர்வோர் மற்றும் மக்கள் உரிமை பாதுகாப்பு அறக்கட்டளை நிர்வாகி வசந்த பிரியா, மேலாளர் சக்திவேல், மாநில போராட்ட குழு தலைவர் ஜானகிராமன், செய்தி தொடர்பாளர் கோவிந்தன், மாவட்ட செயலாளர் முருகன், முத்துகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.
தலைமை நிலைய அலுவலர் செந்தில்குமார் நன்றி கூறினார்.


