/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ திண்டிவனம் அ.தி.மு.க.,எம்.எல்.ஏ., அர்ஜூனன் இல்ல திருமண விழா திண்டிவனம் அ.தி.மு.க.,எம்.எல்.ஏ., அர்ஜூனன் இல்ல திருமண விழா
திண்டிவனம் அ.தி.மு.க.,எம்.எல்.ஏ., அர்ஜூனன் இல்ல திருமண விழா
திண்டிவனம் அ.தி.மு.க.,எம்.எல்.ஏ., அர்ஜூனன் இல்ல திருமண விழா
திண்டிவனம் அ.தி.மு.க.,எம்.எல்.ஏ., அர்ஜூனன் இல்ல திருமண விழா
ADDED : செப் 01, 2025 01:06 AM

திண்டிவனம்: திண்டிவனம் அ.தி.மு.க.,எம்.எல்.ஏ.,அர்ஜூனன் இல்ல திருமண விழாவில் முன்னாள் அமைச்சர் சண்முகம் கலந்து கொண்டு, மணமக்களை வாழ்த்தினார்.
வானுார் அருகே சங்கமித்ரா திருமண நிலையத்தில் நேற்று முன்தினம் மாலை திண்டிவனம் தொகுதி அ.தி.மு.க., எம்.எல்.ஏ., அர்ஜூனன்-விஜயா ஆகியோரின் மகன் பொறியாளர் விஷ்ணு-டாக்டர் ஹர்ஷினி திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சண்முகம் தலைமை தாங்கி, மணமக்களை வாழ்த்தினார்.
மணமக்களை, கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் குமரகுரு, எம்.எல்.ஏ.,க்கள் சக்கரபாணி, ரவி, மரகதம் குமரவேல், செந்தில்குமார், அருண்மொழித்தேவன், மாநில ஜெ.,பேரவை துணை செயலாளர் பாலசுந்தரம், மாவட்ட பொருளாளர் வெங்கடேசன், அ.தி.மு.க., திண்டிவனம் நகர செயலாளர் தீனதயாளன், ஜெ.,பேரவை நிர்வாகிகள் ரூபன்ராஜ், விஜயகுமார், குமார், ஒன்றிய செயலாளர்கள் புலியனுார் விஜயன், கிருஷ்ணமூர்த்தி, நடராஜன், ரவிவர்மன், சித்தாமூர் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் முருகன், பள்ளிப்பாக்கம் பஞ்சாயத்து தலைவர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட எம்.ஜி.ஆர்.இளைஞர் அணி இணை செயலாளர் முருகன், அமைப்பு சார ஓட்டுநர் அணி திருப்பதியார்சங்கர், வழக்கறிஞர் அணி குலசேகரன், குமரவிலாஸ் குமரன், மாவட்ட மகளிர் அணி செயலாளர் தமிழ்ச்செல்வி, திண்டிவனம் நகர இளைஞரணி செயலாளர் உதயகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களை, மணமக்களின் பெற்றோர் அர்ஜூனன்-விஜயா, கருணாகரன்-புனிதா ஆகியோர் வரவேற்றனர்.