/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ விழுப்புரம் ஆர்.டி.ஓ., ஆபிசில் விஜிலென்ஸ் 'ரெய்டு' விழுப்புரம் ஆர்.டி.ஓ., ஆபிசில் விஜிலென்ஸ் 'ரெய்டு'
விழுப்புரம் ஆர்.டி.ஓ., ஆபிசில் விஜிலென்ஸ் 'ரெய்டு'
விழுப்புரம் ஆர்.டி.ஓ., ஆபிசில் விஜிலென்ஸ் 'ரெய்டு'
விழுப்புரம் ஆர்.டி.ஓ., ஆபிசில் விஜிலென்ஸ் 'ரெய்டு'
ADDED : அக் 16, 2025 02:36 AM

விழுப்புரம்: விழுப்புரம் வட்டார போக்குவரத்து அலுவலகம் மற்றும் துணை போக்குவரத்து ஆணையர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் 'திடீர்' ரெய்டு நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில் வட்டார போக்குவரத்து அலுவலகம், துணை போக்குவரத்து ஆணையர் அலுவலகம் உள்ளது. தீபாவளியொட்டி இங்கு பணம், பரிசு பொருட்கள் பெறுவதாக விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார் வந்தது. அதையடுத்து, லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி., அழகேசன் தலைமையில் இன்ஸ்பெக்டர் ஈஸ்வரி மற்றும் போலீசார் நேற்று மாலை 4:00 மணிக்கு இரு அலுவலகங்களிலும் ரெய்டு நடத்தினர்.
அங்கிருந்த அலுவலர்கள், ஊழியர்கள், இடைத்தரகர்களிடம் சோதனை நடத்தினர்.
இரவு 9:00 மணிக்கு, லஞ்ச ஒழிப்பு துறை போலீசாரின் சோதனை முடிவடைந்தது. சோதனையில் அலுவலகத்தில் கணக்கில் வராத பணம் 25,350 ரூபாயை போலீசார் கைப்பற்றினர்.
லஞ்ச ஒழிப்பு துறை போலீசாரின் திடீர் சோதனையால், வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.


