/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/மஞ்சள் பை விழிப்புணர்வு நிழற்குடை திறப்புமஞ்சள் பை விழிப்புணர்வு நிழற்குடை திறப்பு
மஞ்சள் பை விழிப்புணர்வு நிழற்குடை திறப்பு
மஞ்சள் பை விழிப்புணர்வு நிழற்குடை திறப்பு
மஞ்சள் பை விழிப்புணர்வு நிழற்குடை திறப்பு
ADDED : ஜன 28, 2024 06:52 AM
அவலுார்பேட்டை : அவலுார்பேட்டையில் மீண்டும் மஞ்சள் பை விழிப்புணர்வு நிழற்குடை திறப்பு விழா நடந்தது.
அவலுார்பேட்டை பழைய சந்தை மேட்டு பகுதியில் மரம் நடுவோர் சங்கம் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் மீண்டும் மஞ்சள் பை விழிப்புணர்வு நிழற்குடை திறப்பு விழா நடந்தது.
ஒன்றிய கவுன்சிலர் நெடுஞ்செழியன் தலைமை தாங்கி, நிழற்குடையை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு மஞ்சள் பை வழங்கி பேசினார்.
இதில் ஒன்றிய துணை சேர்மன் விஜயலட்சுமி, மாவட்ட கவுன்சிலர் செல்வி, ஒன்றிய கவுன்சிலர் ஷாகின்அர்ஷத், ஊராட்சி தலைவர் செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.