/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ பூட்டிக்கிடக்கும் துணை சுகாதார நிலையம் பூட்டிக்கிடக்கும் துணை சுகாதார நிலையம்
பூட்டிக்கிடக்கும் துணை சுகாதார நிலையம்
பூட்டிக்கிடக்கும் துணை சுகாதார நிலையம்
பூட்டிக்கிடக்கும் துணை சுகாதார நிலையம்
ADDED : ஜூன் 14, 2024 04:18 AM

விருதுநகர்: விருதுநகர் அருகே சின்னமூப்பன்பட்டியில் அரசு துணை சுகாதார நிலையம் பூட்டியே கிடப்பதாக மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
சின்னமூப்பன்பட்டியில் 2019 - 2020 ஆண்டு ரூ. 25 லட்சத்தில் துணை சுகாதார நிலையம் புதியதாக கட்டப்பட்டது. இதன் மூலம் சின்னமூப்பன்பட்டி, சிவஞானபுரம், பாப்பாக்குடி பகுதி மக்களுக்கு உடனடி முதலுதவி சிகிச்சை, காய்ச்சல் உள்பட சிறு பாதிப்புகளுக்கு மருத்துவ உதவி கிடைத்தது.
இந்நிலையில் துணை சுகாதார நிலையத்தில் நியமிக்கப்பட்ட இரண்டு பணியாளர்களும் மாற்றுப்பணி, விடுப்பில் உள்ளதால் கடந்த சில நாள்களாக பூட்டி கிடக்கிறது.
மேலும் மாவட்டத்தில் அடிக்கடி மழை, வெயில் என சீதோஷ்ண நிலை மாறுவதால் இப்பகுதியில் இருமல், சளி, காய்ச்சல் ஆகிய பாதிப்பிற்கு ஆளானவர்கள் விருதுநகருக்கு வந்து சிகிச்சை பெற்று செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சின்னமூப்பன்பட்டி அரசு துணை சுகாதார நிலையத்தை உடனடியாக செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
விருதுநகர் மாவட்ட சுகாதார அலுவலர் யசோதாமணி கூறியதாவது: சின்னமூப்பன்பட்டியில் அரசு துணை சுகாதார நிலையம் பூட்டி இருப்பது குறித்து ஆய்வு செய்து உடனடியாக மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.