ADDED : ஜூன் 11, 2024 07:24 AM
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தின் அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்காக ஆதார் சிறப்பு முகாம் நடக்கிறது.
அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை, வருகைப் பதிவு எமிஸ் தளத்தில் பதிவு செய்யப்படுகிறது. இதில் மாணவர்களின் பெற்றோர் விவரம், முகவரி, ஆதார், ரேஷன் ஆகிய முக்கிய விவரங்கள் பதிவேற்ற வேண்டும்.
மாணவர்களுக்கான அரசு திட்டங்கள், உயர்கல்வி உதவித்தொகை, வங்கிக்கணக்கு துவங்குதல் ஆகியவற்றுக்கு ஆதார் எண் அவசியம். அரசு பள்ளி மாணவர்கள் சிரமமின்றி ஆதார் அட்டை பெறுவதற்காக அனைத்து பள்ளிகளிலும் ஆதார் சிறப்பு முகாம் நடக்கிறது. விருதுநகர் தங்கம்மாள் பெரியசாமி நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆதார் பதிவு செய்யும் சிறப்பு முகாமை கலெக்டர் ஜெயசீலன் தலைமை வகித்து துவக்கி வைத்தார்.