ADDED : ஜூலை 01, 2024 05:59 AM
வத்திராயிருப்பு, : குன்னூரை சேர்ந்தவர் செந்தில் குமார் 46, இவர் ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா போலீஸ் ஸ்டேஷனில் ஏட்டாக பணியாற்றி வந்தார். உடல் நலம் குன்றி மருத்துவ விடுப்பில் இருந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார்.
இவரது உடலுக்கு ஏ.டி.எஸ்.பி. அசோகன், டி.எஸ்.பி.முகேஷ் ஜெயக்குமார், இன்ஸ்பெக்டர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர். பின் நேற்று மதியம் குன்னுார் அருகே உள்ள சுடுகாட்டில், அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.