/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ அருப்புக்கோட்டையில் மக்களுடன் முதல்வர் திட்டம் அருப்புக்கோட்டையில் மக்களுடன் முதல்வர் திட்டம்
அருப்புக்கோட்டையில் மக்களுடன் முதல்வர் திட்டம்
அருப்புக்கோட்டையில் மக்களுடன் முதல்வர் திட்டம்
அருப்புக்கோட்டையில் மக்களுடன் முதல்வர் திட்டம்
ADDED : ஜூலை 12, 2024 04:04 AM
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை பாலையம்பட்டியில் மக்களுடன் முதல்வர் திட்டம் நடந்தது. இதற்கு கலெக்டர் ஜெயசீலன் தலைமை வகித்தார்.
எம்.பி., மாணிக்கம் தாகூர் முன்னிலை வகித்தார். அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது:
அனைத்து தரப்பு மக்களுக்கும் 15 அரசு துறைகளில் சேவைகள் எளிதில் கிடைத்திடவும் தாமதங்களை தவிர்த்திட வேண்டும் என்பது இந்த திட்டத்தின் நோக்கம். மக்களின் கோரிக்கைகளை முகாமில் பெற்று உடனடியாக தீர்வு காணப்படும். மாவட்டத்தில் முதற்கட்டமாக டிசம்பர் மாதத்தில் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் ஆகிய பகுதிகளில் 69 முகாம்கள் நடத்தப்பட்டன.
2ம் கட்டமாக ஊரகப்பகுதிகளில் மக்களுடன் முதல்வர் முகாம் நடத்தப்படுகிறது. தற்போது 440 கிராம ஊராட்சிகளில் 65 முகாம்கள் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. மக்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு மனுக்களை கொடுத்து பயனடைய வேண்டும் என்றார்.