Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ சேதமடைந்த நுாலக கட்டடம், பராமரிப்பு இல்லாத கண்மாய்; அருப்புக்கோட்டை குருந்தமடம் ஊராட்சியின் அவலம்

சேதமடைந்த நுாலக கட்டடம், பராமரிப்பு இல்லாத கண்மாய்; அருப்புக்கோட்டை குருந்தமடம் ஊராட்சியின் அவலம்

சேதமடைந்த நுாலக கட்டடம், பராமரிப்பு இல்லாத கண்மாய்; அருப்புக்கோட்டை குருந்தமடம் ஊராட்சியின் அவலம்

சேதமடைந்த நுாலக கட்டடம், பராமரிப்பு இல்லாத கண்மாய்; அருப்புக்கோட்டை குருந்தமடம் ஊராட்சியின் அவலம்

ADDED : ஜூன் 11, 2024 07:20 AM


Google News
Latest Tamil News
அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை அருகே குருந்தமடம் ஊராட்சியில் நுாலக கட்டடம் சேதம் அடைந்தும், ஊராட்சி மயானமும் பராமரிப்பின்றி பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இரண்டையும் புதியதாக அமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்தது குருந்தமடம் ஊராட்சி. இதில் நல்லுார்பட்டி, குருந்தமடம் கிராமங்கள் அடங்கும். இவ்வூரில் ஆடு மாடுகள் வளர்ப்பு அதிகமாக உள்ளது. ஆனால் இவற்றிற்கு சிகிச்சை அளிக்க கால்நடை மருந்தகம் இல்லை. நோயற்ற கால்நடைகளை அவசரத்திற்கு சிகிச்சை செய்ய வேண்டும் என்றால் கூட 10 கி.மீ., தள்ளி உள்ள மலைப்பட்டிக்கு தான் செல்ல வேண்டி உள்ளது.

அதற்குள் கால்நடைகள் இறந்து விடுகின்றன. எனவே கால்நடை மருந்தகம் அமைக்க வேண்டும். 20 ஏக்கரில் உள்ள கண்மாயில் தேங்கி வரும் தண்ணீர் மூலம் நூற்றுக்கும் மேற்பட்ட நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. கண்மாய் பராமரிப்பின்றி போனதால் சீமை கருவேல மரங்கள் அடர்த்தியாக வளர்ந்துள்ளன. இதனால் கண்மாயில் தண்ணீர் சேகரமாகவில்லை. மழைநீர் வரத்து ஓடைகளும் அடைபட்டு போய் உள்ளன.

பல ஆண்டுகளுக்கு முன்பு நுாலகத்துறை சார்பாக இங்கு நுாலகம் அமைக்கப்பட்டது. மக்களுக்கு பயனுள்ளதாக இருந்த இந்த நுாலக கட்டடம் தற்போது சேதம் அடைந்து இடியும் நிலையில் உள்ளது. நுாலக கட்டடத்தை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆதிதிராவிடர் குடியிருப்புக்கு செல்லும் பாதை மோசமாகவும் கிடங்காகவும் உள்ளது. இரவு நேரங்களில் டூவீலர்களில் சென்றால் விழுந்து விபத்து ஏற்படுகிறது. ஊராட்சி மயானம் முட்புதர்கள் வளர்ந்து தகன மேடை இடிந்துள்ளது. இங்கு மின்விளக்கு வசதி இல்லை. மயானத்தில் முட்புதர்களை அகற்றி ஊராட்சி பராமரிப்பு செய்ய வேண்டும்.

குருந்தமடம் கண்மாய் பராமரிப்பு இன்றி சீமை கருவேலம் மரங்கள் வளர்ந்தும், கன மழை பெய்தால் கூட கண்மாயில் தண்ணீர் சேர்வது இல்லை. ஊரின் குடிநீர் ஆதாரமாகவும் கண்மாய் உள்ளது. கண்மாயை நம்பி நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயம் நடந்தது. கண்மாயை பராமரிக்க வேண்டும்.

- அழகர்சாமி, விவசாயி.

ஊர் வழியாகச் செல்லும் ஓடை பராமரிப்பு இன்றி முட்புதர்கள் வளர்ந்து தண்ணீர் செல்ல முடியாத நிலையில் உள்ளது. இதேபோன்று கருப்பசாமி ஓடையும் பராமரிப்பு இன்றி உள்ளது. மழைக்காலம் துவங்கும் முன் இரண்டையும் துார்வாரி பராமரிக்க ஊராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- ரவிச்சந்திரன், விவசாயி.

தூர்வாரப்படாத ஓடைகள்



குருந்தமடம் ஊராட்சியில் நிதி நிலைமைக்கு ஏற்ப வளர்ச்சி பணிகள் செய்யப்படுகிறது. தெற்குப்பட்டியில் ரூ.20 லட்சம் நிதியில் மேல்நிலைத் தொட்டி கட்டப்பட்டுள்ளது. அங்கன்வாடி கட்டட பணிகள் நடக்கிறது. காலை உணவு திட்டத்திற்காக கட்டடம் கட்டப்பட்டுள்ளது. ரோடு வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

- முருகேசன், ஊராட்சி தலைவர்.

மத்திய மாநில அரசுகள் ஒதுக்கும் நிதிகளுக்கு ஏற்ப ஊராட்சிகளுக்கு வளர்ச்சிப் பணிகள் செய்யப்படுகிறது. குருந்தமடம் உட்பட பல ஊராட்சிக்கு உட்பட்ட கண்மாய்கள் துார்வாருவதற்குரிய அறிக்கை அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. நிதி வந்தவுடன் கண்மாய்கள் பராமரிப்பு பணிகள் செய்யப்படும்.

- சசிகலா, ஒன்றிய குழு தலைவர்.

பராமரிப்பு செய்யப்படும்







      Our Apps Available On




      Dinamalar

      Follow us