/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ இறந்த போலீஸ்காரர் குடும்பத்திற்கு நிதி உதவி இறந்த போலீஸ்காரர் குடும்பத்திற்கு நிதி உதவி
இறந்த போலீஸ்காரர் குடும்பத்திற்கு நிதி உதவி
இறந்த போலீஸ்காரர் குடும்பத்திற்கு நிதி உதவி
இறந்த போலீஸ்காரர் குடும்பத்திற்கு நிதி உதவி
ADDED : ஜூலை 16, 2024 04:20 AM
சாத்துார், : சாத்துார் அருகே உடல் நலக்குறைவால் இறந்த போலீஸ்காரரின் குடும்பத்திற்கு சக காவலர்கள் நிதி திரட்டி ரூ. 30 லட்சம் மதிப்பிலான காப்பீட்டு பத்திரம் வழங்கினர்.
வெம்பக்கோட்டை காவல் நிலையத்தில் வனமூர்த்தி லிங்கபுரத்தை சேர்ந்த முத்துப்பாண்டி 41 ,போலீஸ்காரர் பணி புரிந்துவந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் அவர் இறந்தார்.
இவருடன் 2003ம் ஆண்டு பேட்ச் காவலராக பணியில் சேர்ந்த போலீஸ்காரர்கள் ஒருங்கிணைந்து உதவும் கரங்கள் என்றபெயரில் குழு அமைத்தனர். இந்தகுழு சககாவலர்களிடம் நிதி திரட்டி ரூ30 லட்சம் மதிப்பிலான காப்பீட்டு பத்திரத்தை உயிரிழந்த முத்துப் பாண்டியின் மனைவி மற்றும் குழந்தைகளிடம் ஒப்படைத்தனர். போலீஸ்காரர் முத்துப்பாண்டி குடும்பத்தினர் அவர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.