Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ பாதிக்கப்பட்டோருக்கு விபத்து இழப்பீடு வழங்கிய உயர்நீதிமன்ற நீதிபதிகள்

பாதிக்கப்பட்டோருக்கு விபத்து இழப்பீடு வழங்கிய உயர்நீதிமன்ற நீதிபதிகள்

பாதிக்கப்பட்டோருக்கு விபத்து இழப்பீடு வழங்கிய உயர்நீதிமன்ற நீதிபதிகள்

பாதிக்கப்பட்டோருக்கு விபத்து இழப்பீடு வழங்கிய உயர்நீதிமன்ற நீதிபதிகள்

ADDED : ஜூன் 30, 2024 06:09 AM


Google News
Latest Tamil News
ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீவில்லிபுத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஜெகதீஷ் சந்திரா, ராமகிருஷ்ணன் ஆகியோர் நடத்திய ஆய்வின்போது, மோட்டார் வாகன விபத்து வழக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ. 1.50 லட்சம் இழப்பீடு தொகையை வழங்கினர்.

ராஜபாளையத்தை சேர்ந்த சுப்ரமணியன், திக்கையம்மாள் ஆகியோர் உச்சநீதி மன்றத்தில் தொடர்ந்த மோட்டார் வாகன விபத்து வழக்கில் ரூ.1.50 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டிருந்தது.

இதனை ஸ்ரீவில்லிபுத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஆய்விற்கு வந்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஜெகதீஷ் சந்திரா, ராமகிருஷ்ணன் ஆகியோர் வழங்கினர்.

உடல் நலம் பாதித்த நிலையில் ஆட்டோவில் உட்கார்ந்து இருந்த அவர்களுக்கு இழப்பீடு தொகையை நீதிபதிகள் இருவரும் நேரில் வழங்கிய போது, தங்களுக்கு முதியோர் உதவித்தொகை வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.

உடனடியாக ஸ்ரீவில்லிபுத்தூர் தாசில்தார் முத்துமாரி வரவழைக்கப்பட்டு, அவர்களுக்கு முதியோர் உதவி தொகை கிடைத்திட நடவடிக்கை எடுக்குமாறு நீதிபதிகள் இருவரும் அறிவுறுத்தினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us