/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ மக்களுக்கு பாலமாக இருக்க வேண்டும் முதன்மை மாவட்ட நீதிபதி ஜெயக்குமார் பேச்சு மக்களுக்கு பாலமாக இருக்க வேண்டும் முதன்மை மாவட்ட நீதிபதி ஜெயக்குமார் பேச்சு
மக்களுக்கு பாலமாக இருக்க வேண்டும் முதன்மை மாவட்ட நீதிபதி ஜெயக்குமார் பேச்சு
மக்களுக்கு பாலமாக இருக்க வேண்டும் முதன்மை மாவட்ட நீதிபதி ஜெயக்குமார் பேச்சு
மக்களுக்கு பாலமாக இருக்க வேண்டும் முதன்மை மாவட்ட நீதிபதி ஜெயக்குமார் பேச்சு
ADDED : ஜூலை 14, 2024 03:56 AM
ஸ்ரீவில்லிபுத்துா : ஸ்ரீவில்லிபுத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் விருதுநகர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் சட்டம் சார்ந்த தன்னார்வ தொண்டர்களுக்கான சிறப்பு பயிற்சி வகுப்பு நடந்தது.
தலைமை குற்றவியல் நீதிபதி பிரித்தா முன்னிலை வகித்தார். விழாவில் முதன்மை மாவட்ட நீதிபதி ஜெயக்குமார் பேசுகையில், சட்ட தன்னார்வ தொண்டர்கள் விளிம்பு நிலையில் இருக்கும் மக்களுக்கு விழிப்புணர்வு மற்றும் தேவையான சட்ட உதவிகளை செய்ய வேண்டும். இலவச சட்ட உதவி மையத்திற்கும், ஏழை மக்களுக்கும் இடையே பாலமாக இருந்து செயல்பட வேண்டும். அரசு நலத்திட்ட உதவிகள் தகுதியான நபர்களுக்கு கிடைக்க பாடுபட வேண்டும். நீதி பெற அனைவருக்கும் சம வாய்ப்பு என்ற கொள்கையுடன் பணியாற்ற வேண்டும் என்றார்.
பயிற்சி வகுப்பில் இலவச சட்ட உதவி வழக்கறிஞர் செல்வகுமார், வழக்கறிஞர்கள் ராக்கப்பன், பார்த்தசாரதி, நித்யா, சந்தான லட்சுமி ஆகியோர் தன்னார்வ தொண்டர்களுக்கு சட்ட வகுப்பினை எடுத்தனர். பின்னர் பயிற்சி பெற்ற சட்ட தன்னார்வ தொண்டர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டது.