/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ காட்சிப்பொருளாக புறக்காவல் நிலையம்-- காட்சிப்பொருளாக புறக்காவல் நிலையம்--
காட்சிப்பொருளாக புறக்காவல் நிலையம்--
காட்சிப்பொருளாக புறக்காவல் நிலையம்--
காட்சிப்பொருளாக புறக்காவல் நிலையம்--
ADDED : ஜூன் 30, 2024 06:11 AM

ராஜபாளையம் : ராஜபாளையத்தில் குற்றச்செயல்கள் தடுக்கும் விதமாக அமைக்கப்பட்ட மலையடிப்பட்டி புறக்காவல் நிலையம் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
ராஜபாளையத்தில் ரயில்வே ஸ்டேஷன் கிழக்கு பகுதியில் சஞ்சீவி மலையை ஒட்டிய வடக்கு தெற்கு மலையடிப்பட்டி பகுதிகளில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குடியிருந்து வருகின்றனர்.
சத்திரப்பட்டியில் இருந்து ஸ்ரீவில்லிபுத்துார் ரோட்டிற்கு இணைப்பு சாலையாக உள்ளது.
இந்நிலையில் இப்பகுதியில் அடிக்கடி அடிப்படை தேவைகளுக்காக பஸ் மறியல், போதை பாக்குகள் கண்டுபிடிப்பு, திருட்டு, அடிதடி, கொலை உள்ளிட்ட குற்றச் செயல்கள் நடைபெற்று வந்தது.
இதை கண்காணிப்பதற்காக வடக்கு போலீஸ் ஸ்டேஷன் சார்பில் நான்கு முக்கு ரோட்டில் புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டது.
இருப்பினும் தற்போது வரை செயல்பாட்டிற்கு கொண்டு வராமல் பூட்டிய நிலையில் உள்ளதால் நோக்கம் வீணாகி வருவதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
எனவே மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து நடைமுறைக்கு கொண்டு வர இப்பகுதியினர் எதிர்பார்த்துள்ளனர்.