ADDED : ஜூன் 11, 2024 07:22 AM
திருமணம் மறுப்பு; காதலன் கைது
விருதுநகர்: புதுக்கோட்டை அரந்தாங்கியைச் சேர்ந்தவர் நிவேதிதா 21. இவரும் விருதுநகர் ஆனைக்குட்டத்தை சேர்ந்த தீனதயாள் 26, காதலித்துள்ளனர். இருவரும் புதுக்கோட்டை சித்தன்னவாசலில் சந்திக்கும் போது தீனதயாள் பாலியல் சீண்டல் செய்து விட்டு திருமணம் செய்ய மறுத்துள்ளார். விருதுநகர் அனைத்து மகளிர் போலீசார் தீனதயாளை கைது செய்தனர்.
தொழிலாளி பலி
சாத்துார்: சாத்துார் நீராவிபட்டியை சேர்ந்தவர் சிவலிங்கம் 37. பனை மரம் ஏறும் தொழிலாளி. நேற்று முன்தினம் காலை 7:30 மணிக்கு பெரியகொல்லப்பட்டி கண்மாய் கரையில் உள்ள பனை மரத்தில் நுங்கு பறிக்க ஏறிய போது சறுக்கி கீழே விழுந்து பலியானார். இருக்கன்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.
கஞ்சா: இருவர் கைது
விருதுநகர்: கோவிந்தநல்லுாரைச் சேர்ந்தவர் முத்துகுமார் 21. இவர் ஜூன் 9ல் டூவீலரில் தியாகராஜபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே 300 கிராம் கஞ்சாவை விற்பனை செய்ய பதுக்கி வைத்திருந்ததை வச்சக்காரப்பட்டி போலீசார் கண்டறிந்து கைது செய்தனர்.
* சிவகாசி: சிவன் கோயில் நந்தவனத் தெருவை சேர்ந்தவர் சண்முக கனி 77. இவர் அண்ணா காலனி அருகே விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தார். டவுன் போலீசார் அவரை கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
அடையாளம் தெரியாதவர் பலி
விருதுநகர்: விருதுநகர் ரயில்வே ஸ்டேஷன் அருகே உள்ள பிள்ளையார் கோயில் முன்பு அடையாளம் தெரியாத 40 வயது மதிப்புடைய ஆண் இறந்த நிலையில் கிடந்தார். மேற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.
டூவீலர் விபத்து; இளைஞர் பலி
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே பாலையம்பட்டி அருந்ததியர் தெருவை சேர்ந்தவர் நாகராஜ் 23. இவர் எலக்ட்ரிசியனாக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் டூவீலரில் (ஹெல்மெட் அணியவில்லை) சாத்துாருக்கு சென்று விட்டு ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார். அருப்புக்கோட்டையில் உள்ள மதுரை ரோடு சி.எஸ்.ஐ., சர்ச் அருகில் வந்து கொண்டிருந்தபோது நிலை தடுமாறி ரைஸ்மில் சுற்றுச்சுவரில் மோதி பலியானார். டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.
முதியவர் தற்கொலை
சிவகாசி: புதுக்கோட்டை கீழத் தெருவை சேர்ந்தவர் கூடாண்டி 84. இவரது மனைவி இறந்ததால் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் அவர் அப்பகுதியில் உள்ள மயானத்தில் உள்ள மரத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். எம்.புதுப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.-