/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ அடிப்படை வசதிகள் கேட்டு ரோடு மறியல் அடிப்படை வசதிகள் கேட்டு ரோடு மறியல்
அடிப்படை வசதிகள் கேட்டு ரோடு மறியல்
அடிப்படை வசதிகள் கேட்டு ரோடு மறியல்
அடிப்படை வசதிகள் கேட்டு ரோடு மறியல்
ADDED : ஜூன் 11, 2024 07:20 AM

அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை நகராட்சி 25வது வார்டில் அடிப்படை வசதிகள் கேட்டு மக்கள் ரோடு மறியல் செய்தனர்.
அருப்புக்கோட்டை நகராட்சி 25வது வார்டை சேர்ந்தது தேவா டெக்ஸ் நகர். இங்கு ரோடு, வாறுகால், தெருவிளக்கு, குடிநீர் உட்பட அடிப்படை வசதிகள் செய்யக்கோரி பலமுறை கோரிக்கை வைத்தும் நகராட்சி நடவடிக்கை எடுக்கவில்லை. நேற்று மதியம் அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் திருச்சுழி ரோட்டில் அமர்ந்து மறியல் செய்தனர்.
இதனால் போக்குவரத்து பாதிப்பு அடைந்தது. தகவல் அறிந்த போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். நகராட்சி அதிகாரிகள் வசதிகளை செய்து தருவதாக, கூறியதன் பேரில் மறியலை கைவிட்டனர். இதனால் போக்குவரத்து அரை மணி நேரம் பாதிப்பு அடைந்தது.