/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ ஆர்.ஆர். நகர் வீடுகளில் கொள்ளைம.பி.,யை சேர்ந்த 4 பேரிடம் விசாரணை ஆர்.ஆர். நகர் வீடுகளில் கொள்ளைம.பி.,யை சேர்ந்த 4 பேரிடம் விசாரணை
ஆர்.ஆர். நகர் வீடுகளில் கொள்ளைம.பி.,யை சேர்ந்த 4 பேரிடம் விசாரணை
ஆர்.ஆர். நகர் வீடுகளில் கொள்ளைம.பி.,யை சேர்ந்த 4 பேரிடம் விசாரணை
ஆர்.ஆர். நகர் வீடுகளில் கொள்ளைம.பி.,யை சேர்ந்த 4 பேரிடம் விசாரணை
ADDED : ஜூலை 16, 2024 04:14 AM
விருதுநகர் ; விருதுநகர் அருகே ஆர்.ஆர்., நகரில் தனியார் நிறுவன துணை மேலாளர்கள் வீடுகளில் இருந்து 80 பவுன் கொள்ளை அடிக்கப்பட்ட வழக்கில் அதே நிறுவனத்தில் வேலை பார்க்கும் மத்திய பிரதேசத்தை 4 பேரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விருதுநகர் அருகே ஆர்.ஆர்., நகரில் தனியார் நிறுவனத்தில் மெக்கானிக்கல் பிரிவில் துணை மேலாளராக பணிபுரிபவர் பாலமுருகன். நிர்வாகப்பிரிவு துணை மேலாளராக இருப்பவர் ராமச்சந்திரன். இருவரும் நிறுவன வளாகத்தில் உள்ள குடியிருப்பில் வசிக்கின்றனர். இதில் பாலமுருகன் பெற்றோரை பார்ப்பதற்காக திருநெல்வேலிக்கு சென்றார். ராமச்சந்திரன் சென்னை சென்றார்.
நேற்று முன்தினம் காலை 11:00 மணிக்கு குடியிருப்பு பகுதியில் வசிக்கும் பிற ஊழியர்கள் பார்த்த போது வீடுகளின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த நகைகள், பணம் கொள்ளையடிக்கப்பட்டது தெரிந்தது.
வச்சக்காரப்பட்டி போலீசார் கூறியதாவது: ஜூலை 13 இரவு நடந்த கொள்ளையில் பாலமுருகன் வீட்டில் 80 பவுன் நகைகள், வெள்ளிப்பொருட்கள், ரூ. 50 ஆயிரம், ராமச்சந்திரன் வீட்டில் இருந்து கொள்ளை போனதையும் சேர்த்து 200 பவுன் இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் தனது வீட்டில் பொருட்கள் திருடு போகவில்லை என ராமச்சந்திரன் தெரிவித்தார்.
சி.சி.டி.வி., பதிவுகளை ஆராய்ந்ததில் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் அதே நிறுவனத்தில் வேலை பார்க்கும் மத்திய பிரதேசம் மாநிலம் டான்டாவைச் சேர்ந்த சஞ்ஜெய் , அவரது நண்பர் 3 பேர் சேர்ந்து இதில் ஈடுபட்டது தெரிந்துள்ளது. இவர்களிடம் விசாரித்து வருகிறோம் என்றனர்.