ADDED : ஜூலை 01, 2024 05:34 AM
விருதுநகர் : விருதுநகர் காமராஜ் பொறியியல், தொழில்நுட்பக் கல்லுாரியில் இறுதியாண்டு பயிலும் மாணவர்களுக்கான ஒரு மாதம் திறன் வளர் பயிற்சி முகாமை கல்லுாரி செயலாளர் தர்மராஜன் தலைமை வகித்து துவக்கி வைத்தார்.
கல்லுாரி முதல்வர் செந்தில் உள்பட பேராசிரியர்கள் பலர் பங்கேற்றனர். இதில் மாணவர்களுக்கு புரோகிராமிங், ஆப்டிடியூட் பயிற்சி வழங்கப்படுகிறது. கல்லுாரி வேலை வாய்ப்பு அலுவலர் சுடலைமணி நன்றி கூறினார்.