/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ துார்வாராத வரத்துக் கால்வாய், சேதமான மயான ரோடு துார்வாராத வரத்துக் கால்வாய், சேதமான மயான ரோடு
துார்வாராத வரத்துக் கால்வாய், சேதமான மயான ரோடு
துார்வாராத வரத்துக் கால்வாய், சேதமான மயான ரோடு
துார்வாராத வரத்துக் கால்வாய், சேதமான மயான ரோடு
ADDED : ஜூலை 16, 2024 04:04 AM

காரியாபட்டி ; மேல்நிலைத் தொட்டி, மயான ரோடு, சமுதாயக்கூடம் இல்லாதது, ஊருணி, வரத்துக் கால்வாய் தூர்வாராதது உள்ளிட்டவைகளால் காரியாபட்டி சூரனுார் ஊராட்சி மக்கள் சிரமத்தில் உள்ளனர்.
காரியாபட்டி சூரனூர் ஊராட்சியில் தேனுார், கூவர்குளம், எஸ்.பி.புதுார், உவர்குளம், கே.நெடுங்குளம், கோவிலாங்குளம் உள்ளிட்ட ஊர்கள் உள்ளன. தேனுார் கிராமத்தில் ஒரே ஒரு மேல்நிலைத் தொட்டி உள்ளது. குடிநீர் சப்ளை செய்ய போதுமானதாக இல்லை. மயான ரோடு மழை நேரத்தில் சேரும் சகதியுமாக இருப்பதால் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். கூவர்குளத்தில் சமுதாயக்கூடம் கிடையாது. விசேஷ வைபவங்கள் நடத்த போதிய இடம் இல்லாமல் சிரமப்படுகின்றனர். எஸ்.பி.புதுாரில் உப்பு தண்ணீராக இருப்பதால் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுகின்றது.
உவர்குளத்தில் மயான ரோடு சேதம் அடைந்துள்ளது. கே. நெடுங்குளத்தில் வாறுகால் வசதி இல்லை. மயான ரோடு சேதம் அடைந்துள்ளது. கோவிலாங்குளத்தில் பேவர் பிளாக் கற்கள் பதிக்காதது உள்ளிட்ட அடிப்படை வசதிகள் சரிவர கிடையாது. தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.