/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ பணிச்சுமையால் மன உளைச்சலில் வி.ஏ.ஓ.,கள் பணிச்சுமையால் மன உளைச்சலில் வி.ஏ.ஓ.,கள்
பணிச்சுமையால் மன உளைச்சலில் வி.ஏ.ஓ.,கள்
பணிச்சுமையால் மன உளைச்சலில் வி.ஏ.ஓ.,கள்
பணிச்சுமையால் மன உளைச்சலில் வி.ஏ.ஓ.,கள்
ADDED : ஜூலை 17, 2024 03:59 PM
நரிக்குடி : டிஜிட்டல் கிராப் சர்வே பணி, அரசு திட்டங்கள், வி.ஏ.ஓ.,கள் பற்றாக்குறையால் கூடுதல் பணிச்சுமை என மன உளைச்சலுக்கு ஆளாகி வருவதாக வி.ஏ.ஓ.,கள் புலம்பி வருகின்றனர்.
திருச்சுழி தாலுகாவில் 150 க்கும் மேற்பட்ட வருவாய் கிராமங்கள் உள்ளன. 62 வி.ஏ.ஓ.,கள் பணியில் இருந்தனர். தற்போது 50 பேர் மட்டுமே உள்ளனர். 12 வி.ஏ.ஓ.,க்கள் பற்றாக்குறையாக உள்ள இடங்களை
50 வி.ஏ.ஓ.,களில் சிலர் கூடுதல் பொறுப்பாக கவனித்து வருகின்றனர். அரசு திட்டங்கள், பட்டா, சிட்டா, அடங்கல், அளவீடு உள்ளிட்ட பல்வேறு பணிச்சுமைகளால் திணறி வருகின்றனர். இது ஒரு புறம் இருக்க, தற்போது டிஜிட்டல் கிராப் சர்வே பணியில் வி.ஏ.ஓ.,களை ஈடுபடுத்தி வருகின்றனர். தினமும் 100 சர்வே எண்களை அளவீடு செய்ய வேண்டும் என கட்டாயப்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது. இதனால் உடல் ரீதியாக பாதிப்பு ஏற்படுவதாக புலம்புகின்றனர். அதற்கு தேவையான தொழில் நுட்ப உபகரணங்கள் இல்லாதது பெரும் குறையாக உள்ளது. டிஜிட்டல் கிராப் சர்வே பணியில் டார்க்கெட் முடிக்க வேண்டும் என்கிற பணிச்சுமை, வி.ஏ.ஓ.,கள் பற்றாக்குறையால் கூடுதல் கிராமங்களை கவனிக்க வேண்டிய கட்டாயம், மக்களுக்கு தேவையான சான்றிதழ்கள் வழங்க முடியாத சூழலால் என நரிக்குடி, அ.முக்குளம் பிர்க்கா வி.ஏ.ஓ.,கள் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர். ஆகவே திருச்சுழி தாலுகாவில் பற்றாக்குறையாக உள்ள வி.ஏ.ஓ., காலி பணியிடங்களை நிரப்பி, கூடுதல் பணி சுமையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வி.ஏ.ஓ.,கள் வலியுறுத்தினர்.