/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/முன்விரோதத்தில் தகராறு 18 பேர் மீது வழக்குமுன்விரோதத்தில் தகராறு 18 பேர் மீது வழக்கு
முன்விரோதத்தில் தகராறு 18 பேர் மீது வழக்கு
முன்விரோதத்தில் தகராறு 18 பேர் மீது வழக்கு
முன்விரோதத்தில் தகராறு 18 பேர் மீது வழக்கு
ADDED : ஜன 14, 2024 04:37 AM
நரிக்குடி : நரிக்குடி வீரசோழன் விளக்குச்சேரியைச் சேர்ந்தவர்கள் விஜயகுமார், ஹேமநாதன். கண்மாயில் விறகு வெட்டுவது சம்பந்தமாகவும், வயலுக்கு நீர் பாய்ச்சுவது தொடர்பாகவும் முன் விரோதம் இருந்து வருகிறது.
இந்நிலையில் இரு தரப்பினரும் தகாத வார்த்தையில் பேசி கொலை மிரட்டல் விடுத்து, ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.
ஹேமநாதன், சேதுபதி, சுப்பாராஜ், கார்த்திக், அய்யனார், ஈஸ்வரன், சங்கரன் மீதும், விஜயகுமார், தீபா, சேகரன், ராமு, தங்கராசு, தங்கப்பாண்டி, பாக்கியம், மற்றொரு தங்கராசு, அரிமுருகன், காளிமுத்து, சரவணன் மீதும் வீரசோழன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


