Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ நாட்டு மக்கள் மேல் அக்கறை இல்லாத அரசு தனது வீட்டின் மேல் மட்டும் அக்கறை

நாட்டு மக்கள் மேல் அக்கறை இல்லாத அரசு தனது வீட்டின் மேல் மட்டும் அக்கறை

நாட்டு மக்கள் மேல் அக்கறை இல்லாத அரசு தனது வீட்டின் மேல் மட்டும் அக்கறை

நாட்டு மக்கள் மேல் அக்கறை இல்லாத அரசு தனது வீட்டின் மேல் மட்டும் அக்கறை

ADDED : மே 23, 2025 11:22 PM


Google News
சத்திரப்பட்டி: நாட்டு மக்கள் மேல் அக்கறை இல்லாத ஸ்டாலின் அரசு தனது வீட்டின் மேல் மட்டும் அக்கறை கொண்டுள்ளது ,என முன்னாள் அ.தி.மு.க., அமைச்சர் ஆர்.பி உதயகுமார் பேசினார்.

சத்திரப்பட்டி அருகே நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில், டாஸ்மாக் முறைகேடுகள் குறித்து அமலாக்கத்துறை ஆதாரத்துடன் வெளியிட்டு உள்ளனர்.

நீதிமன்றத்தின் தீர்ப்பை விவாதிக்க முடியாது. நாட்டு மக்கள் மேல் அக்கறை இல்லாத ஸ்டாலின் அரசு தனது வீட்டின் மேல் மட்டும்அக்கறை கொண்டுஉள்ளார்.

2011ல் திமுக ஆட்சி மின்வெட்டின் காரணமாக வீட்டிற்கு போனது. 2026ல் சட்டம் ஒழுங்கு பிரச்னை குடும்ப பாசத்தால் வீட்டுக்கு போவது உறுதி. கடந்த ஆட்சியில் விசைத்தறி தொழிலாளர் போராட்டத்தின் போது அமைச்சர்கள் நேரடியாக வந்து பேச்சுவார்த்தை நடத்தி கூலி உயர்வு வாங்கி கொடுத்தோம். இன்றைய ஆட்சியாளர்களுக்கு மக்கள் மீது அக்கறை இல்லை.

இரண்டு ஆண்டுகளுக்கு முன் கோடம்பாக்கத்தில் வாய்ப்பு தேடி அலைந்து கொண்டிருந்த இளைஞன் ஆயிரம் கோடி செலவில் சினிமா தயாரிக்க முயற்சி செய்துஉள்ளார். அதற்கு தகுதி மு.க முத்து மகள் வழி பெண்ணை திருமணம் செய்தார் என்பதே.

ரத்தீஷ் என்பவர் உதயநிதியின் கூண்டு பறவையாக இருந்து கூண்டை விட்டு தற்போது பறந்து விட்டார். இவருக்கு தற்போது குபேரனுக்கு கடன் கொடுக்கும் அளவுக்கு பொருளாதாரம் வளர்ந்துஉள்ளது. விளம்பர அரசு நிலைத்ததாக வரலாறு இல்லை, என பேசினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us