/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ திருநாகேஸ்வரமுடையாருக்கு 2 டன் மலர்களால் அபிஷேகம் திருநாகேஸ்வரமுடையாருக்கு 2 டன் மலர்களால் அபிஷேகம்
திருநாகேஸ்வரமுடையாருக்கு 2 டன் மலர்களால் அபிஷேகம்
திருநாகேஸ்வரமுடையாருக்கு 2 டன் மலர்களால் அபிஷேகம்
திருநாகேஸ்வரமுடையாருக்கு 2 டன் மலர்களால் அபிஷேகம்
ADDED : செப் 24, 2025 05:54 AM
நரிக்குடி : நரிக்குடி எஸ்.கல்விமடையில் திருநாகேஸ்வரமுடையார், திருநாகேஸ்வரி தாயார் கோயிலில் 25ம் ஆண்டு புரட்டாசி விழா நடந்தது.
மூலவர், உற்ஸவ மூர்த்திகளான சிவபெருமான், அம்பாளுக்கு, வில்வம், ரோஜா, செவ்வந்தி, சாமந்தி, தாமரை, மரிக்கொழுந்து, முல்லை, மல்லிகை உள்ளிட்ட 2 டன் மலர்களால் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. கோயிலில் இருந்து சிவ வாத்தியங்கள், மேள தாளங்கள், வான வேடிக்கை முழங்க உற்ஸவர் பூப்பல்லக்கில் வீதி உலா நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.