/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதியில் சூழல் சுற்றுலா மேம்படுத்த நடவடிக்கைமேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதியில் சூழல் சுற்றுலா மேம்படுத்த நடவடிக்கை
மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதியில் சூழல் சுற்றுலா மேம்படுத்த நடவடிக்கை
மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதியில் சூழல் சுற்றுலா மேம்படுத்த நடவடிக்கை
மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதியில் சூழல் சுற்றுலா மேம்படுத்த நடவடிக்கை
ADDED : பிப் 06, 2024 12:07 AM
ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகத்தின் மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதிகளில் சூழல் சுற்றுலாவை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என புலிகள் காப்பகத் துணை இயக்குனர் தேவராஜ் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது
ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகத்தில் மத்திய, மாநில அரசுகளின் நிதி உதவியுடன் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கூடுதலாக வேட்டை தடுப்பு காவலர்கள் நியமிக்கப்பட்டு வனப்பகுதி முழு அளவில் கண்காணிக்கப்படும். சூழல் சுற்றுலா குழு மூலம் மலைவாழ் மக்கள் பொருளாதார தன்னிறவு அடைந்து வருகின்றனர். சூழல் சுற்றுலாவை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
தை அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு கூடுதல் நாட்கள் பக்தர்களை அனுமதிப்பது குறித்து வனத்துறை அலுவலர்களுடன் ஆலோசித்து தகவல் தெரிவிக்கப்படும்.
வத்திராயிருப்பில் யானை தந்தங்கள் பிடிபட்ட சம்பவத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வன குற்றங்கள் நடக்காமல் தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.


