ADDED : ஜன 28, 2024 06:54 AM
சாத்துார் : சாத்துார் வடக்கு வீதியில் அ.தி.மு.க வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடந்தது.
கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். நகரச் செயலாளர் இளங்கோவன் கிழக்கு ஒன்றியச்செயலாளர் சண்முகக்கனி முன்னிலை வகித்தனர். பேச்சாளர்கள் கல்யாண சுந்தரம் நாவலூர் முத்து ஆகியோர் பேசினர்.
முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் மணிமேகலை, சுப்பிரமணியன் மாவட்ட அவைத் தலைவர் ஜெயபெருமாள், மாவட்டத் துணைச் செயலாளர் பூபாலன், மேற்கு ஒன்றியச் செயலாளர் தேவதுரை, சாத்துார், வெம்பக்கோட்டை ஒன்றியங்களின் நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.