Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ தீபாவளி பலகாரம் உரிமம் பெற்று தயாரிக்க அறிவுரை

தீபாவளி பலகாரம் உரிமம் பெற்று தயாரிக்க அறிவுரை

தீபாவளி பலகாரம் உரிமம் பெற்று தயாரிக்க அறிவுரை

தீபாவளி பலகாரம் உரிமம் பெற்று தயாரிக்க அறிவுரை

ADDED : அக் 06, 2025 04:03 AM


Google News
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் தீபவாளியை முன்னிட்டு பலகாரம் தயாரிப்பவர்கள் உணவு பாதுகாப்பு துறையில் உரிமம் பெற்று, தரமான உணவு பொருட்களை தயாரித்து விற்க வேண்டும் என கலெக்டர் சுகபுத்ரா அறிவுறுத்தி உள்ளார்.

அவரது செய்திக்குறிப்பு: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் இனிப்பு, காரம் தயாரிப்பவர்கள் பலகார சீட்டு நடத்துபவர்கள் உள்ளிட்ட அனைத்து உணவு தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்கள் உணவு பாதுகாப்புத்துறையில் பதிவு செய்து உரிமம் அல்லது பதிவுச் சான்றிதழ் பெற்ற பின்பே உணவு பொருட்களை தயாரித்து விற்க வேண்டும்.

தரமான மூலப்பொருட்களை பயன்படுத்தி சுகாதாரமான முறையில் தயாரித்து மக்களுக்கு வழங்க வேண்டும். கலப்பட பொருள்களையோ, தரம் குறைந்த எண்ணெய், நெய், டால்டா, மூலப்பொருட்களையோ பயன்படுத்தக்கூடாது.

நிறமிகளை சேர்க்கக்கூடாது. விதிமீறினால் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பொட்டலமிடப்பட்ட உணவு பொருட்களில், விபரச்சீட்டில் காலாவதி தேதி உள்ளிட்ட விவரங்கள் எழுதப்பட்டிருக்க வேண்டும். பண்டிகை காலத்தில் மட்டும் பலகாரங்கள் தயாரிப்பவர்கள் உட்பட அனைத்து தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்கள் உடனடியாக http://foscos.fssai.gov.in என்ற இணையதளத்தில் தங்களது வணிகத்தை பதிவு செய்ய வேண்டும்.

வாடிக்கையாளர்கள் புகார்கள் ஏதேனும் இருப்பின் 94440 42322 என்ற மாநில உணவு பாதுகாப்பு துறையின் வாட்ஸ் ஆப் எண்ணிற்கோ அல்லது 04562 252255 என்ற மாவட்ட உணவு பாதுகாப்பு துறையின் அலுவலக தொலைபேசி எண்ணிற்கோ தொடர்பு கொள்ளலாம், என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us