/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ முருக பக்தர்கள் மாநாட்டில் விருதுநகர் விருது பெறும் மாவட்டமாக திகழ வேண்டும் பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேச்சு முருக பக்தர்கள் மாநாட்டில் விருதுநகர் விருது பெறும் மாவட்டமாக திகழ வேண்டும் பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேச்சு
முருக பக்தர்கள் மாநாட்டில் விருதுநகர் விருது பெறும் மாவட்டமாக திகழ வேண்டும் பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேச்சு
முருக பக்தர்கள் மாநாட்டில் விருதுநகர் விருது பெறும் மாவட்டமாக திகழ வேண்டும் பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேச்சு
முருக பக்தர்கள் மாநாட்டில் விருதுநகர் விருது பெறும் மாவட்டமாக திகழ வேண்டும் பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேச்சு
ADDED : ஜூன் 04, 2025 12:41 AM

விருதுநகர்: மதுரை முருக பக்தர்கள் மாநாட்டில் விருதுநகர் மாவட்டம் முதல் இடத்தை பெற்று விருது பெறும் மாவட்டமாக திகழ வேண்டும் என பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேசினார்.
விருதுநகரில் நடந்த முருக பக்தர்கள் மாநாடு குறித்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேசியதாவது:
தமிழகத்தில் தேசிய ஜனநாயக ஆட்சி மலர திருப்பரங்குன்றம் முருக பக்தர்கள் மாநாடு அடித்தளமாக அமையும். முருகன் மலையை சிக்கந்தர் மலையாக மாற்றியுள்ளனர்.
ஆனால் ஆங்கிலேயர் ஆட்சி காலத்திலேயே திருப்பரங்குன்றம் மலை முருகனுக்கு சொந்தமானது என இங்கிலாந்து நீதிமன்றத்தால் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
சிக்கந்தர் மலையை ஆய்வு செய்யக்கூடாது. நம்முடைய வருங்கால சந்ததியினருக்கு திருப்பரங்குன்றம் மலையை கொடுக்க வேண்டும்.
தி.மு.க., 1977ல் மதுரையில் பொதுக்குழு கூட்டம் நடத்தியது. அவர்கள் எப்போது எல்லாம் பொதுக்குழுவை கூட்டுகிறார்களோ அடுத்த 12 ஆண்டுகளுக்கு ஆட்சிக்கு வர மாட்டார்கள்.
அப்போது பா.ஜ., பெரிய இடத்தில் இல்லாமல் இருந்திருக்கலாம் தற்போது பா.ஜ., பெரிய இடத்திற்கு வந்துள்ளது. 1500 எம்.எல்.ஏ.,க்கள், 240 எம்.பி.,க்கள் கொண்டு உலகத்திலேயே பெரிய கட்சியாக பா.ஜ., உள்ளது. உலகத்தின் பெரிய தலைவராக பிரதமர் மோடி உள்ளார்.
மதுரை தி.மு.க.,விற்கு ராசியான இடமாக இருந்ததில்லை. ஆனால் பா.ஜ.,விற்கு தற்போது ராசியான இடமாக உள்ளது. மதுரையில் ஆட்சி செய்யும் மீனாட்சி அம்பாளுக்கு அடுத்தப்படியாக தேசிய ஜனநாயகம் ஆட்சியும் நடக்கும். மலேசியா, சிங்கப்பூர் நாடுகளில் இருந்து பலரும் முருக பக்தர்கள் மாநாட்டிற்கு வரவுள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் 5 சட்டசபை தொகுதிகளில் உறுதியாக தேசிய ஜனநாயக கூட்டணி வெல்லும். இதில் மீதமுள்ள 2 சட்டசபை தொகுதிகள் இன்னும் 10 மாதங்களில் நமக்கே வந்து சேரும்.
விருதுநகர் மாவட்டத்தின் பா.ஜ., கிழக்கு, மேற்கு மாவட்டங்களில் இருந்து தலா 20 ஆயிரத்திற்கும் குறையாத தொண்டர்கள் மதுரை முருக பக்தர்கள் மாநாட்டில் பங்கேற்க வேண்டும்.
இம்மாநாட்டில் விருதுநகர் மாவட்டம் முதல் இடத்தை பெற்று விருது பெறும் மாவட்டமாக இருக்க வேண்டும், என்றார்.
இக்கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், விருதுநகர் பா.ஜ., கிழக்கு மாவட்டத் தலைவர் பாண்டுரங்கன், மேற்கு மாவட்டத் தலைவர் ராஜா, மாநில பொதுச் செயலாளர் பொன் பாலகணபதி உள்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.