/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ சரக்கு ரயில் மீது ஏறிய சிறுவன் காயம் சரக்கு ரயில் மீது ஏறிய சிறுவன் காயம்
சரக்கு ரயில் மீது ஏறிய சிறுவன் காயம்
சரக்கு ரயில் மீது ஏறிய சிறுவன் காயம்
சரக்கு ரயில் மீது ஏறிய சிறுவன் காயம்
ADDED : செப் 29, 2025 06:52 AM
மதுரை : மதுரையில் 'ரீல்ஸ்' மோகத்தால் சரக்கு ரயில் மீது ஏறிய சிறுவன், மின் கம்பி உரசியதில் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டார்.
கர்நாடக மாநிலம் நவலுார் செல்வதற்காக துாத்துக்குடி மாவட்டம் மீளவிட்டானில் இருந்து வந்த சரக்கு ரயில், மதுரை ஆண்டாள்புரம் மேம்பாலத்தின் கீழ் சிக்னலுக்காக நேற்று நின்றது. மதியம் 3:30 மணிக்கு ஜெய்ஹிந்த்புரத்தை சேர்ந்த 13 வயது சிறுவன், ரீல்ஸ் மோகத்தால் செல்பி எடுக்க சரக்கு ரயில் மீது ஏறினார்.
ஆபத்தை உணராமல் ஏறியவர் மீது மின் கம்பி உரசியதில் உடல் முழுதும் தீக்காயம் ஏற்பட்டது. ரயில்வே போலீசார், சிறுவனை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து விசாரிக்கின்றனர்.
''மின்சார இன்ஜின்கள் மூலம் ரயில்களை இயக்க தண்டவாளங்களுக்கு மேல் உயர் மின் அழுத்த கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் செல்லும் 25 ஆயிரம் வோல்ட் மின்னோட்டம், ஒரு நொடியில் உயிரைப் பறித்துவிடும். எனவே ரயில்களின் மேல் ஏறுவது, செல்பி எடுப்பது மிகவும் ஆபத்தானது'' என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.


