ADDED : பிப் 25, 2024 06:04 AM
சாத்துார் : சாத்துார் எஸ். ஆர்.என் எம். கல்லுாரியில் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் புற்றுநோய் விழிப்புணர்வு முகாம் நடந்தது.
முதல்வர் ராஜகுரு தலைமை வகித்தார். மோகன் மெடிசிட்டி மருத்துவமனை டாக்டர் மகாலட்சுமி பிரசாத் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.
நாட்டு நலப்பணித் திட்ட மாணவிகளுக்கு கேன்சர் பற்றிய விழிப்புணர்வு தகவல்களை கூறினார். மாணவிகளின் கேள்விகளுக்கு பதில் கூறினார். சாத்துார் ரோட்டரி கிளப் உறுப்பினர் பிரேம் ராஜ் நன்றி கூறினார். முகாமில் மாணவிகள் பல கலந்து கொண்டனர்.