ADDED : செப் 29, 2025 06:51 AM
விருதுநகர் : மதுரை ஜெய்ஹிந்த்புரம் சுந்தரராஜபுரத்தைச் சேர்ந்தவர் கவுதம் 20.
இவருக்கும் விருதுநகரில் உள்ள உறவினர் பெண்ணுக்கும் திருமணமானது. கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து, கவுதம் வேறு திருமணம் செய்து மதுரையில் வசிக்கிறார். குழந்தையை பார்க்க வருமாறு உறவினர் மாரிமுத்து அழைத்ததால் செப். 22ல் விருதுநகருக்கு வந்தார். அப்போது முனீஸ்வரன், மாரிமுத்து, ஆனந்த், அய்யாகண்ணு உட்பட 9 பேர் கவுதமை தாக்கினர். மேற்கு போலீசார் 9 பேர் மீது வழக்கு பதிந்தனர்.


