/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/இடிந்து விழும் நிலையில் கூட்டுறவு சங்க கட்டடம்இடிந்து விழும் நிலையில் கூட்டுறவு சங்க கட்டடம்
இடிந்து விழும் நிலையில் கூட்டுறவு சங்க கட்டடம்
இடிந்து விழும் நிலையில் கூட்டுறவு சங்க கட்டடம்
இடிந்து விழும் நிலையில் கூட்டுறவு சங்க கட்டடம்
ADDED : பிப் 25, 2024 06:09 AM

காரியாபட்டி, : காரியாபட்டியில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி அலுவலக கட்டடம் படு மோசமாக இடிந்து விழும் நிலையில் இருப்பது, ரோட்டோரத்தில் காய்கறி கடைகள், டாஸ்மாக் வருபவர்கள் டூவீலரை நிறுத்தி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்துவது, கள்ளிக்குடி ரோட்டின் நடுவில் இருக்கும் மின்கம்பங்களால் விபத்து நடக்க வாய்ப்பு இருப்பது உள்ளிட்ட பிரச்னைகளால் மக்கள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
காரியாபட்டி பேரூராட்சியில் பெண்கள் அரசு மேல்நிலைப் பள்ளியில் இருந்து முக்குரோடு வரையில ரோட்டோரத்தில் பாதி அளவு காய்கறி கடைகள் வைத்து ஆக்கிரமித்துள்ளனர். டாஸ்மாக் வருபவர்கள் டூவீலரை ரோட்டில் நிறுத்தி போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தி வருவது தொடர்கதையாக இருந்து வருகிறது. வாகன ஓட்டிகள் ரோட்டை கடக்க படாத பாடுபடுகின்றனர். போக்குவரத்து நெரிசலால் அடிக்கடி விபத்து நடக்கிறது.
மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி அலுவலக கட்டடம் படுமோசமாக இடிந்து விழும் நிலையில் உள்ளது. ரேஷன் கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் சேதம் அடைந்த கட்டடத்தின் அருகே உட்கார்ந்து இருப்பதால் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. வங்கிக்கு வரும் வாடிக்கையாளர்கள் டூவீலர்களை ரோடு வரைக்கும் நிறுத்தி இடையூறு ஏற்படுத்தி வருவதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. கள்ளிக்குடி ரோட்டின் நடுவில் மின்கம்பங்கள் உள்ளன. அதிவேகமாக வரும் வாகனங்கள் விபத்தில் சிக்க வாய்ப்பு உள்ளது.