ADDED : பிப் 12, 2024 04:29 AM
சிவகாசி: சிவகாசி அரசன் கணேசன் பாலிடெக்னிக் கல்லுாரியில் ஆண்டு விழா, நிறுவன விழா கொண்டாடப்பட்டது.
கல்லுாரி தலைவர் அசோகன், ஹர்ப்ஸ் இந்தியா, டிராக்ஸ் இந்தியா நிர்வாக இயக்குனர் ராஜேந்திரன் தலைமை வகித்தனர். கல்லுாரி கல்வி அதிகாரி புகழ் வரவேற்றார். முதல்வர் நந்தகுமார் ஆண்டறிக்கை சமர்ப்பித்தார். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
அமைப்பியல் துறை விரிவுரையாளர் வேல்முருகன் நன்றி கூறினார். விரிவுரையாளர்கள் பெமில், மாரிமுத்து தொகுத்து வழங்கினர்.