ADDED : ஜூலை 02, 2025 11:28 PM
காரியாபட்டி: காரியாபட்டியில் ரோட்டோரத்தில் இருபுறங்களிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்து தாசில்தார் மாரீஸ்வரன் தலைமையில், நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் திருமால் அழகு முன்னிலையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
இதில் அரசு மேல்நிலைப் பள்ளியில் அருகே நடைபாதை கடைகளை அகற்றுவது, நடைபாதை வியாபாரிகளை வாரச்சந்தையில் இடம் கொடுத்து விற்பனை செய்ய நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
நெடுஞ்சாலைத்துறையினர், போலீசார் உட்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.