ADDED : பிப் 11, 2024 01:29 AM

விருதுநகர்: விருதுநகர் காமராஜ் பொறியியல் கல்லுாரியில் பட்டமளிப்பு விழா கல்லுாரி தலைவர் பெரியசாமி தலைமையில் நடந்தது.
செயலாளர் தர்மராஜன், முதல்வர் செந்தில், நிர்வாக உறுப்பினர்கள், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், அலுவலக ஊழியர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியில் பெங்களூரு இஸ்ரோ ஆராய்ச்சி வளாகத்தின் முன்னாள் ஒருங்கிணைப்பு இயக்குநர் ஜெயந்திராஜேஷ் பங்கேற்று பட்டங்களை வழங்கி பேசினார்.
அவர் மேலும் பேசியதாவது: மாணவர்கள் பெறுகின்ற பட்டம் வாழ்க்கைக்கும், நாட்டிற்கு பெருமை சேர்க்கும் விதமாக இருக்க வேண்டும்.
நமது தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக வளர்ந்த நாடுகளுடன் போட்டிபோடும் அளவிற்கு உயர்ந்திருக்கிறோம். வளர்ந்த நாடுகளின் பட்டியலில் சேருவதற்கு மாணவர்களின் பட்டம் பயன்பட வேண்டும், என்றார்.