/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/போடப்பட்ட ஆறே மாதத்தில் பாலம் சேதம்போடப்பட்ட ஆறே மாதத்தில் பாலம் சேதம்
போடப்பட்ட ஆறே மாதத்தில் பாலம் சேதம்
போடப்பட்ட ஆறே மாதத்தில் பாலம் சேதம்
போடப்பட்ட ஆறே மாதத்தில் பாலம் சேதம்
ADDED : பிப் 11, 2024 12:37 AM

சிவகாசி: சிவகாசி மாநகராட்சி அலுவலகம் அருகே புதிதாக அமைக்கப்பட்ட பாலம் 6 மாதங்களுக்குள்ளாகவே கற்கள் பெயர்ந்து இருப்பதால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
சிவகாசி ரத்தினம் நகரில் மாநகராட்சி அலுவலகம் இயங்குகிறது. இதே பகுதியில் உள்ள தெருக்களில் ரோடு, வாறுகால் பாலம் சேதமடைந்து இருந்தது.
இதனைத் தொடர்ந்து ரத்தினம் நகரில் ஆறு மாதங்களுக்கு முன்பு புதிதாக ரோடு, வாறுகால் பாலம் போடப்பட்டது. இந்நிலையில் இங்கு புதிதாக போடப்பட்ட இரு பாலங்களிலும் சிமெண்ட், கற்கள் பெயர்ந்து விட்டது. இதில் நடந்து செல்ல முடியவில்லை. டூவீலரில் செல்பவர்கள் தடுமாறி விழுகின்றனர்.
இதே நிலை தொடர்ந்தால் பாலம் விரைவில் முற்றிலும் சேதம் அடைந்து விழ வாய்ப்பு உள்ளது. எனவே பாலத்தை சீரமைக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.