/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/சேதமான திருமங்கலம்-- ராஜபாளையம் சாலை விரைவில் சீரமைப்பு! மத்திய சாலை போக்குவரத்து துறையின் சிறப்பு அனுமதிசேதமான திருமங்கலம்-- ராஜபாளையம் சாலை விரைவில் சீரமைப்பு! மத்திய சாலை போக்குவரத்து துறையின் சிறப்பு அனுமதி
சேதமான திருமங்கலம்-- ராஜபாளையம் சாலை விரைவில் சீரமைப்பு! மத்திய சாலை போக்குவரத்து துறையின் சிறப்பு அனுமதி
சேதமான திருமங்கலம்-- ராஜபாளையம் சாலை விரைவில் சீரமைப்பு! மத்திய சாலை போக்குவரத்து துறையின் சிறப்பு அனுமதி
சேதமான திருமங்கலம்-- ராஜபாளையம் சாலை விரைவில் சீரமைப்பு! மத்திய சாலை போக்குவரத்து துறையின் சிறப்பு அனுமதி
ADDED : ஜூன் 26, 2024 07:40 AM
ஸ்ரீவில்லிபுத்தூர் : தற்போது சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படும் திருமங்கலம்- ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்க மத்திய அரசின் சாலை போக்குவரத்து துறை சிறப்பு அனுமதி வழங்கி உள்ளது. இதனையடுத்து நிதி ஒதுக்கீடு பெற்று உடனடியாக பணிகள் துவங்கும் என தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்ட இயக்குனர் வேல்ராஜ் தெரிவித்தார்.
திருமங்கலத்தில் இருந்து கல்லுப்பட்டி, அழகாபுரி, கிருஷ்ணன் கோவில், ஸ்ரீவில்லிபுத்தூர், வன்னியம்பட்டி, ராஜபாளையம், சேத்தூர், தேவதானம் வழியாக கொல்லம் வரை தேசிய நெடுஞ்சாலை செல்கிறது.
தற்போது இந்த வழித்தடம் நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்டு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதனால் கிருஷ்ணன் கோவிலில் இருந்து தேவதானம் வரையுள்ள ரோடு முறையாக பராமரிக்கப்படாமல் பல இடங்களில் குண்டும், குழியுமாகி காணப்படுகிறது. அடிக்கடி விபத்துகளும் உயிர்பலிகளும், காயங்களும் ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில் தேவதானத்தில் இருந்து திருமங்கலம் வரை ரோட்டினை சீரமைக்க மத்திய அரசின் சாலை போக்குவரத்து துறை சிறப்பு அனுமதி வழங்கி உள்ளது.
இதுகுறித்து இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய நாகர்கோவில் மண்டல திட்ட இயக்குனர் வேல்ராஜ் கூறியதாவது,
தற்போது திருமங்கலத்தில் இருந்து ராஜபாளையம் வரை நான்கு வழிச்சாலை பணிகள் நடப்பதால், தற்போது உள்ள தேசிய நெடுஞ்சாலை, ஒரு கைவிடப்பட்ட ரோடு ஆகும். ஆனால், இந்த வழித்தடத்தில் தினமும் அதிகளவில் போக்குவரத்து நடப்பதால் சேதமடைந்துள்ள ரோட்டை சீரமைக்க மத்திய அரசின் சாலை போக்குவரத்து துறை சிறப்பு அனுமதி வழங்கி உள்ளது. விரைவில் நிதி ஒதுக்கீடு பெற்று, சுமார் 12 மில்லி மீட்டர் உயரத்திற்கு இரண்டடுக்கு தார் ரோடு அமைக்கப்பட உள்ளது.
இதன்படி தேவதானத்தில் இருந்து கிருஷ்ணன் கோவில் வரை 25 கிலோ மீட்டர் தூரமும், டி.கல்லுப்பட்டியில் இருந்து திருமங்கலம் வரை 15 கிலோ மீட்டர் தூரமும் சேதமடைந்த ரோடு சீரமைக்கப்படும். இதற்கான பணிகள் ஜூலை மாதம் துவங்கி விரைவில் முடிக்கப்படும் ,என்றார்.