/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ அரசாணையின்றி வழிகாட்டி மதிப்பை 30 சதவீதம் உயர்த்துவதா பத்திர எழுத்தர்கள் எதிர்ப்பு அரசாணையின்றி வழிகாட்டி மதிப்பை 30 சதவீதம் உயர்த்துவதா பத்திர எழுத்தர்கள் எதிர்ப்பு
அரசாணையின்றி வழிகாட்டி மதிப்பை 30 சதவீதம் உயர்த்துவதா பத்திர எழுத்தர்கள் எதிர்ப்பு
அரசாணையின்றி வழிகாட்டி மதிப்பை 30 சதவீதம் உயர்த்துவதா பத்திர எழுத்தர்கள் எதிர்ப்பு
அரசாணையின்றி வழிகாட்டி மதிப்பை 30 சதவீதம் உயர்த்துவதா பத்திர எழுத்தர்கள் எதிர்ப்பு
ADDED : செப் 26, 2025 01:51 AM

விருதுநகர்: விருதுநகரில் அரசாணை ஏதுமின்றி நிலத்தின் வழிகாட்டி மதிப்பை 30 சதவீதம் வரை உயர்த்தப்பட்டதாக கூறி பத்திர எழுத்தர்கள் பத்திரப்பதிவுத்துறை அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் நிலங்களுக்கான சர்வே எண், தெரு வாரியாக வழிகாட்டி மதிப்புகளை, பதிவுத்துறை நிர்ணயிக்கிறது. இந்த மதிப்புகள் அடிப்படையில், சொத்து விற்பனை பத்திரங்கள் பதிவு செய்யப்படும். 2023ல் பிரமாண பத்திரம் ஒப்பந்தம் பொது அதிகாரம் உள்ளிட்ட 22 வகையான பத்திரப்பதிவுகளுக்கு 10 முதல் 33 சதவீதம் வரை முத்திரைத்தாள் கட்டணம் உயர்த்தப்பட்டு 2024 மே மாதம் முதல் நடைமுறைக்கு வந்தது. அத்துடன் சொத்தின் வழிகாட்டி மதிப்பும் உயர்த்தப்பட்டது. இதனால் நிலங்களுக்கான சந்தை மதிப்பு, பதிவுக் கட்டணம் உயர்ந்தது. கடந்த 2 ஆண்டுகளில், சொத்தின் வழிகாட்டி மதிப்பு 50 சதவீதம் முதல் 60 சதவீதம் வரை உயர்த்தியுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் விருதுநகர் மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் நேற்று காலை பத்திரப்பதிவு துறை அதிகாரிகள் நிலத்தின் வழிகாட்டி மதிப்பு 30 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதாகவும் அதன்படி பத்திரங்களைத் தயார் செய்து தர வேண்டுமெனவும், அதன் பிறகு தான் பத்திர பதிவு செய்ய முடியும் எனவும் பத்திர எழுத்தர்களிடம் தெரிவித்ததை அடுத்து பத்திர எழுத்தர்கள் நிலத்தின் வழிகாட்டு மதிப்பு 30 சதவீதம் உயர்ந்ததற்கான அரசாணை ஏதும் உள்ளதா எனக் கேட்டு அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின் நடந்த பேச்சுவார்த்தையில், இன்று(வியாழன்) ஒரு நாள் மட்டும் பழைய வழிகாட்டி மதிப்பின் படி பத்திரப் பதிவு செய்யப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து பத்திர எழுத்தர்கள் கலைந்து சென்றனர். ஏற்கனவே தயார் செய்யப்பட்ட பத்திரங்கள் மட்டும் பதிவு செய்யப்பட்டன.