ADDED : பிப் 12, 2024 04:28 AM
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு, உதவி பெறும் பள்ளி பிளஸ் 1, 2 மாணவர்களிடம் காணொலி வாயிலாக கலெக்டர் ஜெயசீலன் பொதுத்தேர்வு, உயர்கல்வி குறித்து பேசினார்.
அவர் பேசியதாவது: இந்த கல்வியாண்டின் முக்கியமான தேர்வு கால கட்டத்தை நோக்கி இருக்கிறோம். எந்த போட்டியிலும் இறுதிச்சுற்று என்பது மிக முக்கியம். அந்த நேரத்தில் ஏற்படும் சோர்வு, களைப்பு ஏற்பட்டாலும், அதை பொருட்படுத்தாமல் தன்னம்பிக்கையோடு முயற்சி செய்து வெற்றி அடையவேண்டும்.
மாணவர்களின் கவனம், உழைப்பு தேர்வை நோக்கி மட்டுமே இருக்க வேண்டும். அடுத்தவர்களின் தவறுகளில் இருந்து பாடத்தை மாணவர்கள் கற்று கூடுதல் முயற்சியை வெளிப்படுத்தி வாழ்வில் வெற்றி பெற வேண்டும், என்றார்.