/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/திருத்தங்கலில் குழாய் உடைந்து ஓராண்டாக வீணாகும் குடிநீர்; அதிருப்தியில் மக்கள்திருத்தங்கலில் குழாய் உடைந்து ஓராண்டாக வீணாகும் குடிநீர்; அதிருப்தியில் மக்கள்
திருத்தங்கலில் குழாய் உடைந்து ஓராண்டாக வீணாகும் குடிநீர்; அதிருப்தியில் மக்கள்
திருத்தங்கலில் குழாய் உடைந்து ஓராண்டாக வீணாகும் குடிநீர்; அதிருப்தியில் மக்கள்
திருத்தங்கலில் குழாய் உடைந்து ஓராண்டாக வீணாகும் குடிநீர்; அதிருப்தியில் மக்கள்
ADDED : பிப் 01, 2024 11:47 PM

சிவகாசி: திருத்தங்கலில் பழைய வெள்ளையாபுரம் ரோட்டில் போலீஸ் ஸ்டேசன் முன்பு ஒரு ஆண்டாக குழாய் உடைந்து குடிநீர் வீணாவதால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
திருத்தங்கல் பழைய வெள்ளையாபுரம் ரோட்டில் பாண்டியன் நகர், சத்யா நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்வதற்காக மானுார் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் குழாய் பதிக்கப்பட்டுள்ளது.
போலீஸ் ஸ்டேஷன் அருகே ஒரு ஆண்டாக குழாய் உடைந்து குடிநீர் வெளியேறி ரோட்டில் வீணாக ஓடுகிறது. இதனால் அங்கு ரோடும் சேதமடைந்து வருவதால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர்.
திருத்தங்கல் பகுதியில் 20 நாட்களுக்கு ஒரு முறை வினியோகம் செய்யப்பட்டு வருகின்றது. இது போதாத நிலையில், மக்கள் குடிநீரை விலைக்கு வாங்கி பயன்படுத்துகின்றனர்.
இந்நிலையில் குழாய் உடைந்து குடிநீர் வீணாவதால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர். எனவே குழாய் உடனடியாக உடைப்பினை சரி செய்து குடிநீர் வீணாவதை தடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


