/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/திருவிழா நேரங்களில் கட்சி நிகழ்ச்சிகள் ஸ்தம்பிக்கும் போக்குவரத்துதிருவிழா நேரங்களில் கட்சி நிகழ்ச்சிகள் ஸ்தம்பிக்கும் போக்குவரத்து
திருவிழா நேரங்களில் கட்சி நிகழ்ச்சிகள் ஸ்தம்பிக்கும் போக்குவரத்து
திருவிழா நேரங்களில் கட்சி நிகழ்ச்சிகள் ஸ்தம்பிக்கும் போக்குவரத்து
திருவிழா நேரங்களில் கட்சி நிகழ்ச்சிகள் ஸ்தம்பிக்கும் போக்குவரத்து
ADDED : ஜன 28, 2024 07:08 AM
விருதுநகர் : விருதுநகர் தேசப்பந்து மைதானத்தில் திருவிழா நேரங்களில் அரசியல் கட்சி நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதால் போக்குவரத்து ஸ்தம்பித்து வாகன ஓட்டிகள் திணறுகின்றனர்.
விருதுநகர் தேசப்பந்து மைதானத்தின் ஒரு பகுதியில் அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்கள், நினைவேந்தல் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. முன்பு இங்கு கூட்டம் நடத்த மாவட்ட போலீஸ் நிர்வாகம் அனுமதி மறுத்து வந்த நிலையில், தற்போது கூட்டம் நடத்துவது அதிகரித்துள்ளது.
குறிப்பாக செவ்வாய், வெள்ளி கிழமைகள், திருவிழா நேரங்களில் இது போன்ற கூட்டங்களுக்கு அனுமதி தருவதால் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த போலீசார் திணறுகின்றனர்.
இதனால் வழியை அடைத்து வேறு பாதைக்கு மக்களை அனுப்பி வைக்கின்றனர். இதனால்கோயிலுக்கு வழிபட செல்வோர் சுற்றி சுற்றி அலைக்கழிக்கப்படும் சூழல் உள்ளது.
ஆகவே மாவட்ட போலீஸ் நிர்வாகம் கோயில் திருவிழா நேரங்களிலும், பக்தர்கள் மைதானத்தில் கூடும் வழிபாடு நேரங்களிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க, அந்நேரங்களில் மட்டும் அரசியல் கட்சி நிகழ்ச்சிகளுக்கு விலக்கு அளிக்க வேண்டும்.