ADDED : செப் 25, 2025 04:22 AM
காரியாபட்டி : காரியாபட்டியில் கூடுதல் பயணிகளை ஏற்றி சென்ற ஆட்டோக்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
காரியாபட்டியில் ஏராளமான ஆட்டோக்கள் ஓடுகின்றன. உள்ளூரில் பயணிகளை ஏற்றி இறக்கி வருவதுடன், நீண்ட துாரம் பயணிகளை ஏற்றி செல்கின்றனர். மேலும் ஷேர் ஆட்டோ போல் 10க்கு மேற்பட்ட பயணிகளை ஏற்றி செல்கின்றனர். கிராமப்புறங்களுக்கு அனுமதி இன்றி ஷேர் ஆட்டோ போல் இயக்குகின்றனர்.
இதுகுறித்து வட்டாரப் போக்குவரத்து அலுவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் அருப்புக்கோட்டை போக்குவரத்து வாகன ஆய்வாளர் செல்வராஜ் ஆய்வு செய்தார். அப்போது கூடுதல் ஆட்களை ஏற்றி சென்ற 4 ஆட்டோக்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தார். மேலும் இது தொடர்ந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.