ADDED : பிப் 01, 2024 11:48 PM
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் சாலை பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு, தீயணைப்பு துறை சார்பில், தீ தடுப்பு பேரிடர் மீட்பு ஒத்திகை நடந்தது.
ஆர்.டி.ஓ., கண்ணன் தலைமை வகித்தார். டிராபிக் இன்ஸ்பெக்டர் செந்தில்வேல் முன்னிலை வகித்தார். தீயணைப்பு நிலைய அலுவலர் ராமராஜ் தலைமையில், தீ யணைப்பு வீரர்கள் தீ விபத்து ஏற்பட்டால் எப்படி தீயை அணைப்பது, பேரிடரில் சிக்கியவர்களை எப்படி மீட்பது போன்றவை குறித்து ஒத்திகை செய்து காண்பித்தனர். விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டது.


