/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ ஸ்ரீவில்லிபுத்துாரில் ஆடுகள் திருட்டு; சென்னை போலீசுக்கு தொடர்பா ஸ்ரீவில்லிபுத்துாரில் ஆடுகள் திருட்டு; சென்னை போலீசுக்கு தொடர்பா
ஸ்ரீவில்லிபுத்துாரில் ஆடுகள் திருட்டு; சென்னை போலீசுக்கு தொடர்பா
ஸ்ரீவில்லிபுத்துாரில் ஆடுகள் திருட்டு; சென்னை போலீசுக்கு தொடர்பா
ஸ்ரீவில்லிபுத்துாரில் ஆடுகள் திருட்டு; சென்னை போலீசுக்கு தொடர்பா
ADDED : டிச 04, 2025 01:06 AM
ஸ்ரீவில்லிபுத்துார்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் அருகே 2 இடங்களில் 7 ஆடுகள் திருடு போன வழக்கில் இருவரை போலீசார் கைது செய்த நிலையில் சென்னையில் பணியாற்றும் போலீஸ்காரர் ஒருவருக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்துார் அருகே கொளுஞ்சிபட்டியில் நவ.,13ல் ராஜகோபால் என்பவரின் 5 ஆடுகள், நத்தம்பட்டி லட்சுமிபுரத்தில் ராமர் என்பவரின் 2 ஆடுகள் திருடு போயின.
கிருஷ்ணன்கோவில், நத்தம்பட்டி போலீசார் ஆடு திருடியவர்களை தேடி வந்தனர். மதுரை திருப்பரங்குன்றம் நிலையூர் பிரசாத் 24, ஸ்ரீவில்லிபுத்துார் முத்து 28, ஆகிய இருவரையும் கைது செய்தனர். இச்சம்பவத்தில் மதுரையை சேர்ந்த இருவர், சென்னையில் பணியாற்றும் போலீஸ்காரர் ஒருவருக்கும் தொடர்பு உள்ளதாக பிடிப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன் அடிப்படையில் போலீஸ்காரருக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்து ஸ்ரீவில்லிபுத்துார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


