/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/இரண்டு ஆண்டில் 77 பேர் மீது குண்டாஸ்இரண்டு ஆண்டில் 77 பேர் மீது குண்டாஸ்
இரண்டு ஆண்டில் 77 பேர் மீது குண்டாஸ்
இரண்டு ஆண்டில் 77 பேர் மீது குண்டாஸ்
இரண்டு ஆண்டில் 77 பேர் மீது குண்டாஸ்
ADDED : பிப் 02, 2024 06:00 AM
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் 2022, 2023 ஆண்டுகளில் மக்களின் அமைதிக்கு சீர்குலைக்கும் வகையில் ஈடுபட்ட 77 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் அருப்புக்கோட்டை, விருதுநகர், காரியப்பட்டி, சிவகாசி, சாத்துார், ராஜபாளையம், ஸ்ரீவில்லிப்புத்துார் உள்ளிட்ட நகர் பகுதிகள், அதனை சுற்றியுள்ள புறநகர், ஊரகப்பகுதிகளில் தொடர் குற்ற நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள், மக்களின் அமைதியை சீர்குலைக்கும் வகையில் செயல்பட்டவர்கள் என 2022 ஆண்டில் 46 பேரும், 2023 ஆண்டில் 31 பேரும் குண்டர் தடுப்புச்சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.


