Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ விருதுநகர் மாவட்டத்தில் எஸ்.ஐ.ஆர். படிவங்கள் பதிவேற்றும் பணி 98.07 சதவீதம் நிறைவு

 விருதுநகர் மாவட்டத்தில் எஸ்.ஐ.ஆர். படிவங்கள் பதிவேற்றும் பணி 98.07 சதவீதம் நிறைவு

 விருதுநகர் மாவட்டத்தில் எஸ்.ஐ.ஆர். படிவங்கள் பதிவேற்றும் பணி 98.07 சதவீதம் நிறைவு

 விருதுநகர் மாவட்டத்தில் எஸ்.ஐ.ஆர். படிவங்கள் பதிவேற்றும் பணி 98.07 சதவீதம் நிறைவு

ADDED : டிச 04, 2025 04:20 AM


Google News
ஸ்ரீவில்லிபுத்துார்: விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 சட்டசபை தொகுதிகளிலும் நேற்று மாலை 4:00 மணி நிலவரப்படி திருச்சுழி, அருப்புக்கோட்டை தொகுதிகளில் 100 சதவீதம் எஸ்.ஐ.ஆர். படிவங்கள் பதிவேற்றும் பணி முடிவடைந்துள்ள நிலையில், மாவட்டத்தில் ஒட்டுமொத்த அளவில் 98.07 சதவீதம் அளவு நிறைவு பெற்றுள்ளது.

நவ. 4 முதல் துவங்கிய வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முகாம், கடந்த ஒரு மாதமாக இரவு, பகலாக தீவிரமாக நடந்தது. 7 சட்டசபை தொகுதிகளில் உள்ள 1901 ஓட்டு சாவடிகளில் 16 லட்சத்து 26 ஆயிரத்து 485 பேருக்கு

எஸ்.ஐ.ஆர்.படிவங்கள் வழங்கும் பணி நடந்தது.

பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை திரும்ப வாங்கும் பணியில் ஓட்டுசாவடி அலுவலர்களும், அரசியல் கட்சி முகவர்களும் தீவிரம் காட்டினர்.

இதனால் நேற்று மாலை 4:00 மணி நிலவரப்படி திருச்சுழி, அருப்புக்கோட்டை தொகுதியில் 100 சதவீதமும், ராஜபாளையம் 97.67, ஸ்ரீவில்லிபுத்தூர் 98.58, சாத்தூர் 99.53, சிவகாசி 99.50, விருதுநகர் 91.07 சதவீத படிவங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இது மாவட்டத்தில் ஒட்டு மொத்த அளவில் 98.07% ஆகும்.

இதே போல் இறப்பு, வாக்காளர்களை கண்டறிய முடியாத நிலை, நிரந்தர இடம் மாற்றம் உட்பட பல்வேறு காரணங்களால் ராஜபாளையத்தில் 31,162, ஸ்ரீவில்லிபுத்தூரில் 30,625, சாத்தூரில் 21,893, சிவகாசியில் 30,015 விருதுநகரில் 37,220, அருப்புக்கோட்டையில் 23,717, திருச்சியில் 20,961 என மொத்தம் ஒரு லட்சத்து 95 ஆயிரத்து 593 பேரின் வாக்குரிமை குறையும் நிலை உள்ளது.

மாவட்டத்தில் இன்னும் 31,387 பேரின் படிவங்கள் திரும்ப வழங்க வேண்டிய நிலையில், அதனைப் பெறுவதில் ஓட்டு சாவடி அலுவலர்களும் அரசியல் கட்சி முகவர்களும் தீவிரம் காட்டி வரு கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us