/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/அரசியல்வாதிகளின் தலையீடால் தாமதமாகுதா நகராட்சி மார்க்கெட் இடநெருக்கடியில் திண்டாடும் விருதுநகர் மக்கள்; எப்போது பிறக்கும் விடியல்அரசியல்வாதிகளின் தலையீடால் தாமதமாகுதா நகராட்சி மார்க்கெட் இடநெருக்கடியில் திண்டாடும் விருதுநகர் மக்கள்; எப்போது பிறக்கும் விடியல்
அரசியல்வாதிகளின் தலையீடால் தாமதமாகுதா நகராட்சி மார்க்கெட் இடநெருக்கடியில் திண்டாடும் விருதுநகர் மக்கள்; எப்போது பிறக்கும் விடியல்
அரசியல்வாதிகளின் தலையீடால் தாமதமாகுதா நகராட்சி மார்க்கெட் இடநெருக்கடியில் திண்டாடும் விருதுநகர் மக்கள்; எப்போது பிறக்கும் விடியல்
அரசியல்வாதிகளின் தலையீடால் தாமதமாகுதா நகராட்சி மார்க்கெட் இடநெருக்கடியில் திண்டாடும் விருதுநகர் மக்கள்; எப்போது பிறக்கும் விடியல்
ADDED : பிப் 11, 2024 12:33 AM

விருதுநகர்: விருதுநகரில் அரசியல்வாதிகளின் தொடர் தலையீட்டால் அமையவிருந்த நகராட்சி மார்க்கெட் தாமதமாவதுடன், தற்போது செயல்பட்டு வரும் தனியார் மார்க்கெட்டில் இடநெருக்கடி அதிகரித்துள்ளது. மக்கள் காய்கறிகள் வாங்க கடும் சிரமத்தை சந்திக்கின்றனர்.
விருதுநகர் மெயின் பஜாரில் ஒரு சந்தில் தற்போது தனியார் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. நகரின் முக்கிய காய்கறி மார்க்கெட்டான இங்கு தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் வந்து காய்கறிகளை வாங்கி செல்கின்றனர். வார இறுதி நாட்களில் இருமடங்காக கூட்டம் வருகிறது.
இந்நிலையில் இம்மார்க்கெட்டில் ஏற்பட்டுள்ள இடநெருக்கடியால்ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் வாகனங்கள் தீயணைப்பு, ஆம்புலன்ஸ் உள்ளிட்ட எந்த வாகனங்களும் மார்க்கெட் வழியை பயன்படுத்த முடியாது.
2020ல் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட போது சமூக இடைவெளியை பின்பற்றுவதற்காக மார்க்கெட்டை இடமாற்ற முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் ஒரு பகுதியினர் புது பஸ் ஸ்டாண்டிற்கும், இன்னொரு பகுதியினர் பழைய பஸ் ஸ்டாண்டிலும் கடை அமைத்து வியாபாரம் செய்தனர்.
அப்போதைய நகராட்சி நிர்வாகம் விருதுநகர் நகராட்சிக்கென மார்க்கெட் தேவை என முடிவு செய்து திட்ட வரைவு அனுப்பியது. நகராட்சி கமிஷனர் குடியிருப்பு பின்புறம் உள்ள காலியிடத்தில் கட்ட இடமும் தேர்வு செய்யப்பட்டது.
அதற்கு பின் என்ன ஆனது என தெரியவில்லை. 4 ஆண்டுகள் ஆகியும் தற்போது வரை கட்டுமான பணிகள் எதுவும் துவங்காமல் உள்ளது.
இந்நிலையில் மார்க்கெட் வர விடாமல் செய்வதில்அரசியல் வாதிகள் தலையீடு உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதாவது மார்க்கெட் வந்தால் யார் பாதிக்கப்படுவரோ அவர்களே இது தொடர்பாக அரசியல்வாதிகளிடம் நேரில் சந்தித்து ஓட்டரசியல் குறித்து பேசி மார்க்கெட்டை வரவிடாமல் செய்துள்ளதாக குற்றச்சாட்டு உள்ளது.
ஆனால் நகராட்சி நிர்வாகமோ மார்க்கெட் திட்ட வரைவை மறு சீரமைப்பு செய்து வருவதாகவும், அந்த இடத்தில் மார்க்கெட் வர மீண்டும் திட்டவரைவு அனுப்பப்படும் என்றும் கூறுகின்றனர்.
ஆனால் புது பஸ் ஸ்டாண்டை செயல்படுத்துவது தாமதமாவது போன்று நகராட்சி மார்க்கெட் அமைப்பதிலும் தாமதம் ஏற்படலாம் என்கின்றனர் உள்ளூர்வாசிகள்.
இதனால் கைக்கு வந்த மார்க்கெட் அமையாதோ என்ற நிலை உள்ளது. எல்லா நகராட்சிகளும் மாநகராட்சியை நோக்கி சென்று கொண்டிருக்கும் வேளையில் விருதுநகர் மட்டும் நகராட்சியில் இருந்து பேரூராட்சி என்ற நிலைக்கு பின்னோக்கி சென்று கொண்டிருப்பதாக மக்கள் புலம்புகின்றனர்.
மாவட்ட தலைநகரான விருதுநகருக்கு பஸ் ஸ்டாண்ட் இல்லை. நகராட்சி மார்க்கெட் இல்லை. நகருக்கு எந்த மேம்பாடும் செயப்படாததால் கடும் சிரமத்தை மக்கள் சந்திக்கின்றனர்.
மக்கள் சார்ந்து வாழும் நகரை மேம்படுத்துவது தான் அரசியல்வாதிகளின் கடமை. அதை உணர்ந்து நகரின் வளர்ச்சிக்கான எந்த திட்டங்களுக்கும் முட்டுக்கட்டை போடாது முழுவதுமாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.