/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ மாணவர்கள் தங்கும் விடுதியை ஆய்வு செய்வது அவசியம் : அடிப்படை வசதிகள் இருக்கிறதா என கண்காணிப்பது மாணவர்கள் தங்கும் விடுதியை ஆய்வு செய்வது அவசியம் : அடிப்படை வசதிகள் இருக்கிறதா என கண்காணிப்பது
மாணவர்கள் தங்கும் விடுதியை ஆய்வு செய்வது அவசியம் : அடிப்படை வசதிகள் இருக்கிறதா என கண்காணிப்பது
மாணவர்கள் தங்கும் விடுதியை ஆய்வு செய்வது அவசியம் : அடிப்படை வசதிகள் இருக்கிறதா என கண்காணிப்பது
மாணவர்கள் தங்கும் விடுதியை ஆய்வு செய்வது அவசியம் : அடிப்படை வசதிகள் இருக்கிறதா என கண்காணிப்பது
ADDED : ஜூன் 08, 2025 11:21 PM

மாவட்டத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்கள் ஆர்வமுடன் பள்ளிக்கு சென்று வருகின்றனர். அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பெரும்பாலானவர்கள் போக்குவரத்து வசதி இல்லாதது, நீண்ட தூரம் நடந்து சென்று படிப்பது என சிரமத்தில் உள்ளனர்.
கிராமப்புறங்களில் மேல்நிலைப் பள்ளிகளில் ஆங்காங்கே உள்ள விடுதிகளில் தங்கி படிக்க எதிர்பார்க்கின்றனர். இந்நிலையில் கோடை விடுமுறையில் விடுதிகள் புழக்கம் இல்லாமல் கிடந்தது. பெரும்பாலான விடுதிகள் காட்டுப் பகுதிகளில் இருக்கின்றன. செடிகள் முளைத்து புதர் மண்டி கிடப்பதால் விஷப் பூச்சிகள் தங்கியிருக்க வாய்ப்பு உள்ளது. இதனை அப்புறப்படுத்த வேண்டும்.
பெரும்பாலான கட்டடங்களின் மேற்கூரை, சுற்றுச்சுவர் சேதமடைந்து உள்ளன. புழக்கம் இல்லாததால் சமூக விரோத செயல்கள் நடந்திருக்க வாய்ப்பு உள்ளது. குடிநீர் தொட்டிகள், குழாய்கள் உடைந்து, தொட்டிகள் சுத்தம் செய்யாமல் அசுத்தமாக இருக்கும். முன்னேற்பாடாக அதனை பிளிச்சிங் பவுடர் கொண்டு துாய்மைப்படுத்த வேண்டும்.
கழிப்பறைகள் சரிவர பராமரிக்காமல் அசுத்தமாக இருப்பதை பராமரிக்க வேண்டும். அங்கு இருப்பு வைக்கப்பட்டிருக்கும் உணவு பொருட்கள் 2 மாதங்களாக கிடப்பில் இருப்பதால் அதில் புழு பூச்சிகள் உண்டாகி இருக்கும். சமைப்பவர்கள் கண்டும் காணாமல் அப்படியே சமைக்க நேரிடும். வேறு வழி இன்றி அதனை அப்படியே சாப்பிட வேண்டிய சூழ்நிலை ஏற்படும் போது, மாணவர்களுக்கு உடல் உபாதை ஏற்பட்டு தொற்று நோய்கள் உண்டாக வாய்ப்பு உள்ளது.
போக்குவரத்து வசதி இல்லாத, மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள கிராமப்புற மாணவர்கள் விண்ணப்பித்தால் எந்த நிபந்தனையும் இன்றி விடுதியில் தங்க அனுமதிக்க வேண்டும். மாணவர்கள் விடுதியில் தங்குவதற்கு முன், அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து முடிக்க அதிகாரிகள் முன் வர வேண்டும். அடிப்படை வசதிகள் சரிவர உள்ளதா என்பதை கண்காணிப்பு குழு கண்காணிக்க வேண்டும். மாணவர்கள் அச்சமின்றி தங்க தொடர்ந்து ஆய்வு செய்வது அவசியமாகிறது.