ADDED : மே 23, 2025 12:07 AM

விருதுநகர்: விருதுநகர் அருகே குல்லுார்சந்தையில் சவுடேஸ்வரி அம்மன் கோயிலில் கரக மகோற்ஸவ விழா நடந்தது.
பெண்கள் திருவிளக்கு பூஜையுடன் துவங்கி பால் குடம், சக்தி முளைப்பாரி, கண் திறத்தல், சீர்வரிசை, முளைப்பாரி ஊர்வலம் போன்ற நிகழ்சசிகள் நடந்தன. இரவு அம்மன் சக்தி கரகம் எடுத்தல் நடந்தது. ஏற்பாடுகளை தேவாங்கர் மகாஜன சபை நிர்வாக குழு, விழா நிர்வாக குழு செய்தனர்.