ADDED : செப் 29, 2025 06:01 AM
சாத்துார் : சாத்துார் மற்றும் சுற்றுக்கிராமங்களில் நேற்று மதியம் 3:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை லோ வோல்டேஜ் கரண்டால் மக்கள் அவதிப்பட்டனர்.
சாத்துார் நந்தவனப்பட்டி முதல் தெரு மதுரை பஸ் ஸ்டாப் மற்றும் எம்.எல்.ஏ., அலுவலகம் தெரு முஸ்லிம் தெரு,சத்திரப்பட்டி ஆனந்தா நகர், கீழக்காந்திநகர், மேலக் காந்தி நகர், வன்னிமடை ,நென்மேனி, நத்தத்துப்பட்டி, உள்ளிட்ட பகுதிகளில் மதியம் 3:00 மணி முதல் மாலை இரவு 7:00 மணி அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்டும் குறைந்த மின் அழுத்த பாதிப்பாலும் மின்சாதன பொருட்களை இயக்க முடியாமல் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர். மின்சாரம் தடைபட்டதால் மக்கள் அவதிப் பட்டனர்.


